பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 காப்புப் பருவம் சார்வான திருமணமும் உழவராத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார் என்று குறித் திருத்தல் காண்க. இடையருப் பேர்அன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவா ரத்திண் படையமுத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் நடையருப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப் பாடல் தொடைஅருச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து வாழ்வாம் என்று நாவுக்கரசரை வடநாற்கடலும் தென்னுாற் கடலும் நிலை கண்டுணர்ந்த சிவஞான முனிவரும் உழவாரப்படை யினைக் குறித்தல் காண்க. சுந்தரர், 'தேரூர் நெடுவீதி நன்மாடமலி நாவலர் கோன்’ எனத் தம்மைச் சுட்டிக் கொள்வதால் அவரை 'நாவலர் பிரான் என்னலால்' என்றது மிகப் பொருத்தமே ஆகும். சுந்தரருக்கு இப்பெயர் தாம் பிறந்த இடத்தின் காரணமாக அமைந்திருந்தாலும், அவரது நாவின் வன்மை யினல்அமைந்த பெயர் என்று பொருள்கூறினும் அமை வுடைத்தாகும். அவரது நாவன்மையினேப் பல இடத்தும் அவர்தம் பாடல்களில் பரக்கக் காணலாம். இதற்கு ஓர் இட மாகக் கீழ்வரும் அவரது நாவன்மை காட்டும் பாடலைக் காண்க. அது, பாதியோர் பெண்ணை வைத்தாய் படரும்சடைக் கங்கை வைத்தாய் மாதர் நல்லார் வருத்தமது நீயும் அறிதி அன்றே