பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 53 கோதில் பொழில்பு டைசூழ் குண்டையூர்ச்சிலநெல்லுப் பெற்றேன் ஆதி யேஅற்புதனே அவை அட் டித்தரப் பணியே என்பது, சேக்கிழாரும் சுந்தரரை நாவலர்பிரான் என்பதனே அவர் யாத்த புராணத்தும் யாண்டும் காணலாம். சுந்தரர் தாம் முன்பே பரவையாரை மணந்திருந்தும், திருஒற்றியூர்ப் பெரு மானிடம் தமக்குச் சங்கிலியாரையும் மணமுடித்துத் தர வேண்டும் என்பதை விண்ணப்பித்த விண்ணப்பம் எவ்வாறு இருந்தது என்பதைத் தம் நாவன்மை தோன்றப் பாடிய பாடலைப் படித்த அளவில் அறிந்து கொள்ளலாம்.அதாவது, மங்கை ஒருபால் மகிழ்ந்ததும் அன்றி மணிநீள் முடியின்கண் கங்கை தன்னைக் கரந்தருளும் காதல் உடையீர் அடியேனுக் இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் உள்ளத்தொடை அவிழ்த்த திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தும் தீரும்என என்பது. புகலியார் என்பவர் திருஞானசம்பந்தர். அவரை 'வெம்மை தவிர் புகலியார்' என்றனர். அதற்குக் காரணம் அவர், கூன் பாண்டியனது வெப்பு நோயைத் தீர்த்தமையே ஆகும். இதனைச் சேக்கிழார், திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப் பெருமுறை துதிக்கும் ஆற்ருல் பிள்ளையார் போற்றிப் பின்னும் ஒருமுறை தடவ அங்கண் ஒழிந்துவெப் பகன்று பாகம் மருவுதீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் என்று குறிப்பிட்டுள்ளார் 'பூழியர் கோன் வெப்பொழித்த