பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் გ9 ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே என்பது. திருநாவுக்கரசரே ஈண்டு நாவரசர் எனப்பட்டார். திருநாவுக்கரசர் சமயம் சைவமாக இருந்தும், பின்னர்ச் சைன சமயத்தவராக மாறினர். அதன் பின்னர் மீண்டும் சைவ சமயம் சார்ந்தார். இதனுல் மனம் கொதித்த சமணர்கள், தம்மை ஆதரிக்கும் மகேந்திரவர்மன் துணைபெற்று.அப்பருக்கு இடையூறுகள் பல செய்து, அவரைக் கொல்ல முயன்றனர். அவற்றுள் அவரைச் சுண்ணும்புக் காளவாய் அறையில் அடைத்து வைத்ததும், கல்லோடு கட்டிக் கடலில் இட்டதும் ஈண்டுக் குறிப்பிடப்பட்டுள்ளன. நீற்றறையில் இருந்தபோது நாவரசர் இறைவர் திருவருளால் இடையூறு இன்றி இன்ப மாக இருந்ததை அவரே, மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனினும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே என்று பாடிப் பரவசம் உற்றனர். சோக்கிழாரும் இதனே, 'ஆசையில் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார்” என்று மொழிந்துள்ளார். தாண்டக வேந்தரைத் தகவிலாச் சமணர் கல்லொடு கட்டிக் கடலில் இட்டபோது, அவர் நமச்சிவாயப்பதிகம் பாடிக் கடலில் ஆழாது கரையினைச் சார்ந்தார். இதனேயும் அவரே. சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணே திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணே யாவது நமச்சி வாயவே