பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காப்புப் பருவம் அப்பூதி அடிகளார் திங்களூரில் பிறந்த பிராமணர். திருநாவுக்கரசரைக்காணுதிருந்தும், அவரையே தெய்வமாகக் கொண்டவர். அவர் எல்லாப் பொருள்களுக்கும் திருநாவுக் கரசர் திருப் பெயரை இணைத்தே பேசுபவர். அவர் வீட்டிற் குத் திருநாவுக்கரசர் வந்தார். வந்தவரை நல்வரவு கூறி உபசரித்தார். ஆனல் , வந்தவர் திருநாவுக்கரசர் என்பது தெரியாது. அந்நிலையில் அப்பர், அப்பூதியாரை 'நீங்கள் நடத்தும் தண்ணிர்ப் பந்தலுக்கு வேறு ஒருவர் பெயரிட் டிருப்பதேன்?’ என்று வினவினர். அப்பூதியார் சினந்து, நீங்கள் சிவ வேடம் பூண்டிருந்தும் திருநாவுக்கரசரை அறிந்து கொள்ளாது, அவர் பெயரை வாயினுலும் கூருது, வேறு ஒரு பேர் எனலாமோ' என்ருர். அப்பர் அவர் பெருமை அறிந்து தாம்தாம் திருநாவுக்கரசு என்று தெரி வித்துக் கொள்ள, அப்பூதியார் பெரிதும் மகிழ்ந்து, அப்பரை மனேவி மக்கள் சுற்றம் யாவரும் வணங்கச் செய்து, திருவடி களுக்கு அபிடேகம் செய்து, அந்நீரைக் குடித்து, வீட்டில் தெளித்து, இன்புற்று உணவு அருந்த வேண்டினர். தமது மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசு வாழை இலே கொய்யச் சென்றபோது பாம்பு கடித்து இறந்தான். அது பற்றிப் பெற்ருேர் வருந்திலர். அப்பர் உணர்ந்து பதிகம் பாடி, திரு நீறு பூசி எழுப்பினர். அப்பர், அப்பூதியார் தொண்டினைத் தம் பதிகத்திலும் பாடினர். திருநீலநக்கர் சோழ நாட்டில் சாத்த மங்கை என்னும் ஊரில் பிராம்மண மரபில் பிறந்து சிவனடியார்கட்குத் தொண்டு செய்தவர். இவர் அயந்தி இறைவனைத் திருவா திரையில் வழிபடச் சென்றபோது மனேவியாரையும் உடன் அழைத்துச் சென்ருர். சிவலிங்கத்தின்மீது சிலந்தி இருந்தது. அதனை அம்மையார் தம் வாயால் ஊதிப் போக்கினர். வாயால் ஊதியது தவறு என்று கொண்டு அம்மையாரைத் தம்மோடு வாழாதிருக்க வெளியேற்றினர். அம்மையார் செய்வது இன்னதென அறியாது வீடு செல்லாது கோவிலில் தங்கினர். பூசை முடித்து நாயனர் வீடு திரும்பினர். இறைவர் அவர் கனவில் 'உன் மனைவியார் ஊதிய இடம் கொப்புளம்