பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 காப்புப் பருவம் பெரியார் இலக்கணத்தை இறைவனிடம் உபதேசம் பெற்றுப் பின் பயின்று தம்பெயரால் இலக்கணமும் செய் தனர். அதுவே அகத்தியம் எனப்படும். இதனையே கம்பர், "என்றுமுள தென்தமிழ் இயம்பி இசைகொண்டான்' என் றும் 'தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்' என்றும் பாடினர். இறைவர் அகத்தியர்க்குத் தமிழ் அறிவுறுத்தியதைச் சேவைரையரும் 'ஆதியில் தமிழ் நூல் அகத்தியர்க்கு உணர்த்திய மாதொருபாகன வழுத்துதும் போதம் மெய்ஞ்ஞானம் நலம் பெறல் பொருட்டே' என்றும், சிவஞான முனிவர், வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தால் கொல்லேற்றுப் பாகர் என்றும் பாடிக் காட்டியுள்ளார். ஆகவே, அகத்தியர் தமிழ் இலக்கணம் செய்து, தமிழை விரித்துரைத்தவர் ஆயினர். இதுவே திரு முனிவிரித்தருளிய தமிழ் எனப்பட்டது. மூவர் ஆவார் ஈண்டு அப்பர், சுந்தரர், சம்பந்தர். இவர் களே மூவர் முதலிகள். தாயுமானரும் இவர்களே மொழிக்கு மொழி தித்திப் பாகும் மூவர் சொலும் தமிழ் என்று போற்றியுள்ளனர். இம்மூவர்களும் அருளேவடிவானவர்கள் இம் மூவர்கள் அருள் வடிவினர் என்பதை இவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நன்கு தெரியலாம். அப்பரது அருள் வெளிப்பாட்டை அப்பூதிநாயனரின் திருமகனர் பாம்பு கடித்து இறந்தபோது, ஒன்று கொலாம்.அவர் சிந்தை உயர்வரை ஒன்று கொலாம் உயரும்மதி சூடுவர் ஒன்று கொலாம் இடுவெண்ட்லே கையது ஒன்று கொலாம்.அவர் ஊர்வது தானே என்ற பாடல் கொண்ட பதிகம்பாடி எழுப்பியது கொண்டு தெளியலாம். இஃது அருளின் அறிகுறி என்பதைச் சேக்கிழார்