பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 காப்புப் பருவம் சிவனடியார்முன் சிறியராய் நடந்துகொண்டமையின், சிறுத்தொண்டர் எனப்பட்டார். திருஞான சம்பந்தரைத் தம்இல்லம் கொண்டு உபசரித்தவர். திருஞானசம்பந்தர் இவரையும் இவர் தம் திருமகனரையும் தம் பதிகத்தில் சிறப்பித்துப் பாடியுள்ளனர். ஒரு நாள் சிவனடியார் யாரையும் காணப்பெருது சிறுத்தொண்டர் வருந்தும் நிலை யில் சிவபெருமானே சிவனடியாராக வந்து 'ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாக இருக்க வேண்டும். அவனைப் பெற்ருேர் மனம் உவந்து அறுத்துச் சமைத்து உண்பிக்க வேண்டும்" என்று கூற அவ்வாறே தம் மகனே அறுத்து உணவளிக்க, இறைவர் இவர் அன்பை அறிந்து குழந்தையை எழுப்பித் தந்து காட்சி தந்தார். பின் இறைவர் திருவடியுற்று இன் புற்ருர். இவர் நகர் எனும் அடை மொழி கொடுக்கப்பட்டுத் திருஞான சம்பந்தராலும் புகழப்பட்டவர். செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்' என்னும் தொடரைக் காண்க. கணநாதர் சோழ நாட்டில் காழிப்பதியில் (சீர்காழி) வேதியர் மரபில் பிறந்தவர். காழிப் பெருமானுர்க்குத் தொண்டு புரிந்தவர். அடியார்க்கு வரும் இடையூறுகளைத் தீர்ப்பவர். மக்களைத் திருத்தொண்டில் ஈடுபடும்படி செய் தவர். திருஞான சம்பந்தரை வழிபட்டு முத்தி பெற்றவர். சேக்கிழார் இவ்வறுவரையும் ஏத்தெடுத்தவர். இதனை 'அவர்தாள்குடித் தீதினை நீக்கல் உற்றேன்' என்று சாக்கிய ரையும் 'சிறப்புலித்தாள் வாழ்த்தி' என்று சிறப்புலி யாரையும் 'கறி அமுதா ஊறிலாத் தனிப்புதல்வன் தன்னை அறிந்தங் கமுதுாட்டப் பேறு பெற்ருர் சேவடிகள் தலைமேல் கொண்டு' என்று சிறுத்தொண்டரையும் சேரலஞர் கழல் போற்றி" என்று சேரமான்பெருமாள் நாயனரையும் 'கண நானுர் கழல் வாழ்த்தி' என்று கணநாதரையும், 'கூற்றுவனர் கழல் வணங்கி' என்று கூற்றுவநாயனரையும் சேக்கிழார் வணங்கி இருத்தலேக் காண்க. (6)