பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் #07 நெல்வேலி வென்ற என்ற அடையில்ை அவர் பொருது வென்ற மன்னர் என்பதையும், வாயிலார் தொன் மயிலே என்ற அடியில்ை சிறப்பிக்கப்பட்டு அவர் ஊர் இன்னது என்பதையும், முனையடுவார். அறைக்கொண்ட வேல் நம்பி என்று கூறப்பட்டு, அவ்ர் பகைவரை அறைதலையும் வேல் கொண்டிருந்ததையும், நம்பி என்ற சிறப்புப் பெயர்பெற்ற தையும், கழற்சிங்கார் என்பார், உலகெலாம் காக்கின்ற பெரு மான் காடவர்கோன் என்ற சிறப்பால் பல்லவ மன்னர் என் பதையும், இடங்கழி யார்க்கு மடல் சூழ்ந்த தார் நம்பிஎன அவர்தம் மாலைச்சிறப்பையும், செருத்துணேயார் தஞ்சை மன்னர் என்ற சிறப்பால் அரசர் என்பதையும், புகழ்த் துணையார் இறைவர் பொன்னடியில் மனம் வைத்தவர் என்ற சிறப்பால் அவர் சிவபெருமானிடம் கொண்ட பற்றையும், கோட்புலியார் அடல் சூழ்ந்த வேல் நம்பி எனப்பட்டு, அவர்தம் வீரத்தையும், பூசலார் மறைநாவன் நின்றவூர் என்ற அடைகளால் பிராம்மணர், திருநின்ற ஆரினர் என்பதையும், மா னி (மங்கையர்க்கரசியார்) மாதராள் என்பது வரிவளேக்கையாள் என்ற அடையி ல்ை அறியப்படுதலையும் (நேச நாயனர் எந்த அடைமொழி யும் இன்றிக் குறிப்பிடப்பட்டவர்) கோச்செங்கட் சோழர் தென்னவனுய் உலகாண்ட என்ற அடையினல் செங்கோல் செலுத்திய மன்னர் என்பதையும், திருநீலகண்டத்துப் பாணனும் என்பதளுல் இவர் பாணர்மரபினர் என்பதையும் சடையனர் இசைஞானியார் திருநாவலர் கோன் என்ற திால் சுந்தரர் இவ்விருவர் தம் பிள்ளை என்பதையும், அரனடியே அடைந்திட்ட என்னும் அடை இறைவன் திருவடியில் கொண்ட அன்பையும் அறிகின்ருேம். தில்லை வாழ் அந்தணர், பத்தராய்ப் பணிவார், பரமனேயே பாடு வார், சித்தத்தைச் சிவன் பாலே வைத்தவர், திருவாரூர் பிறந்தவர், முப்போதும் திருமேனி தீண்டுவார், முழுநீறுபூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்தார் ஆகிய இவர்கள் தொகையடியாராகக் கருதப்பட்டவர்கள். இவர்கள் பெயர்களாலேயே இன்னர் என அறியப்படுதலின், அடை