பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 113 அதிபத்தர்: நாகபட்டினத்தினர். மீன் பிடிக்கும் போது அகப்பட்டவற்றுள் ஒன்றைச் சிவனுர்க்கு என்று கடலில் விட்டு வந்தனர். ஒரு நாள் ஒரே மீன் அகப்பட்டது. அது பொன் மயமான மீன். அதனையும் கடலில் இட்டவர். கலிக் கம்பர்: திருப்பெண்ணுகடத்தினர். த ம் மி ட ம் வேலை பார்த்தவன், பின்னர்ச் சிவனடியாராக மாறி, இவர் வீட்டிற்கு வந்தபோது, அவனத் தன் அடிமையாள் என எண்ணுது சிவனடியார் என்று உட்கொண்டு, அவன் பாதம் கழுவி வழிபட எண்ணி, மனைவியாரை நீர்வார்க்கச் செய்ய, அவ்வம்மையார் செய்யத் தயங்கியபோது அவர்தம் கையைத் தடிந்தவர். கலியனுர்: இவர் திருவொற்றியூர் எண்ணெய் வணிகர். எண்ணெய் விற்றும் செக்காடியும் கூலி கொண்டும் திரு விளக்கி ஏற்றி வந்தவர். சத்தியார்: சிவனடியார்க்குத் தி மொழி பகர்வோரின் நாக்கை அறுப்பவர், திருவிரிஞ்சைப் பதியினர். பகைவரை வெல்பவர். - ஐயடிகள் காடவர் கோன்: இறைவர் உறைவிடங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் வெண்பா பாடியவர். சிவ வழிபாடு தழைக்க உலகம் ஆண்டவர். பல்லவர் மரபினர். கணம்புல்லர்: வேளுரினர். சிதம்பரம் தி ரு ப் பு லீ ச் சுரத்து ஈசற்குக் கணம்புல்லால் விளக்கெரித்தவர். காரிநாயனுள்: திருக்கடவூரினர். இறைவனே வாழ்த் தியவர். நின்றசீர் நெடுமாறர்: திருநெல்வேலிப் போரில் வெற்றி கண்டவர். சம்பந்தர்க்குத் தோற்ற அமணரைக் கழு முனையில் ஏற்றியவர். வாயிலார்: திருமயிலையினர். இறைவரை மன ஆலயத்தில் அமர்த்தி, அறிவாகிய விளக்கு ஏற்றி, உள்ளமாகிய மலரால் அர்ச்சித்து அன்பாகிய நெய் அமிர்தம் கொடுத்தவர். 8