பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 125 கண்ணப்பர் 'கணை கொள் கண்ணப்பன்' 'இடந்த கண்ணப்பன்' எனப்பட்டார். இவற்ருல் கண்ணே இடந்து கடவுளுக்கு அப்பியவர் என்பது தெரிகிறது. கோச்செங்கட்சோழரை தெருண்ட வாயிடைநூல் கொண்டு சிலந்தி சித்திரப்பந்தர் சிக்கென இயற்றச் சுருண்ட செஞ்சடையாய்அது தன்னைச் சோழனுக்கிய தொடர்ச்சி கண்டடியேன் என்றும், 'கோச்செங்களுன் செய்கோயில்' என்றும் திருவும் வண்மையும் திண்திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு என்றும் பாடி அவர் முன் பிறவியில் சிலந்தியாக இருந்து இறைவர்க்குத் தம் வாய் நூலால் பந்தர் இட்ட தொண்டின் சிறப்பால் சோழர் குலத்தில் பிறந்து அரசேற்றதையும், கோயில் கட்டியதையும் குறிப்பிட்டனர். ஏயர்கோனுர் உற்ற நோயைப் போக்கியதையும், அவர் பன்னிருவேலி பெற்றிருந்தமையினேயும் பாராட்டி 'ஏதநன் னிலம் ஈரறுவேலி ஏயர் கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து' என்று பாடி அறிவித்துள்ளனர். நரசிங்க முனை அரையரைப்பற்றி நாவலூர் ஈசனு குத் தொண்டு செய்பவர், திருநாவலூர் மன்னர் என்ற குறிப்புக்களை நரசிங்கமுனையரையர் ஆதரித்து ஈசனுக்காட் செயும் ஊர் அணி நாவலுரர்' என்று பாடியுள்ளனர். கணம்புல்லர், திருநாளைப் போவார், மூர்க்கர், சாக் கியர் ஆகிய இவர்களைப் பெயர் அளவில் குறிப்பிட்டுச் சென்றுளார். ஆகவே, சுந்தரரால் பதின் மூன்று நாயன் மார்கள் தனித்த முறையில் குறிக்கப் பெற்றனர் என்பதை யும் அறிகிருேம். இவ்வளவே நாயன்மாரைப் பற்றி நாம் அறிவன, நாயன்மார்களைப் பற்றிய குறிப்புக்களை மூவர் பாடிய