பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 151 பூதலம் சூதம் முதலாக நின்ற பொதுப்பிற் சந்த பாதவம் போல்மிக்க வேளாளர் தங்கிய பான்மையினால் ஆதவம் சூழ்தரு பல்கோடி தேசம் அனைத்தினும் மாதவம் செய்ததன் ருேதமிழ் சேர்தொண்ட மண்டலமே என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. தொண்டை நாட்டின் சிறப்பைச் சங்க நூலாம் பத்துப் பாட்டில் ஒரு பாடலாகிய பெரும்பாளுற்றும் படையில், அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக் கொடியோர் இன்று' என்றும் ' உருமும் உரருது அரவும் தப்பா காட்டு மாவும் உறுகண் செய்யா' என்றும் கூறியதோடு இன்றி, அந்நாட்டின் ஐந்திணைகளில் வாழும் மக்கள், வழியே வருவார்க்குத் தக்க முறையில் உணவளித்து உவக்கும் நிலையினையும் கூறப்பட்டுள்ளது. தொண்டை நாடு குறும்பர் நாடு என்றும் கூறப்பட்டது. குறும்பர் ஆடு மாடுகளை மேய்த்து வாழ்ந்தவர். அவர்களே தொண்டை நாட்டை 24 கோட்டங்களாகப் பிரித்தவர்கள். இவர்களே ஆதொண்ட சக்கரவர்த்தி கைப்பற்றித் தன் பெயர் துலங்கத் தொண்டை நாடு எனப் பெயர் இட்டான். என்பாரும் உளர். கரிகால் சோழன் செய்த ஆக்க வேலைகள் பல. அவ்ற்றுள் சில, காடுகொன்று நாடாக்கிக் குளம்தொட்டு வளம்பெருக்கிப் கோயிலோடு குடி நிறீஇ என்பன,