பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 165 சிவஞான சுவாமிகள், உமாபதி சிவம் இவரைப் போற்றி யுள்ளதை முன்பே அறிந்துள்ளோம். தலபுராணம் பாடிய புலவர்கள் இவரை வாயார வாழ்த்திப் போற்றியுள்ளனர். இன்னுேரன்ன காரணம் குறித்தே, "நிவேத்து அனைவரும் வாயார வாழ்த்து குன்றத்துார் உதித்த பெரு வள்ளல்" என்று சிறப்பித்துக் கூறப்பட்டனர். உள்ளி உள்ள எல்லாம் உவந்தியும் வள்ளல்கள் இம்மையில் இன்பம் அடைதற்குரிய பொருள்களேயே ஈய வல்லவர்கள். சேக்கிழாராகிய வள்ளல், இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயக்கவல்ல பெரிய புராணமாம் பெரும் செல்வத்தை உலகவர்க்கு ஈந்தமையின் பெருவள்ளல் எனப்பட்டார். 'கடல் சூழ்ந்த யாப்பு' என்பது, திருத்தொண்டத் தொகையில் உள்ள ஒன்பதாவது பாடல் ஆகும். அது, கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவனும் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடிப் (அடியேன் பொன் அடிக்கே மனம்வைத்த புகழ்ந்துணைக்கும் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. என்பது. இப்பாட்டில் அமர்ந்த ஐவர் கழற் சிங்கர், இடங் கழியார், செருத்துணையர், புகழ்த்துணையார், கோட்புலியார் என்பவர்கள். கழற்சிங்கர்: இவர் பல்லவ மரபினர். வ ட பு வ மன்னர்களே வென்றவர். இவர் ஆட்சியில் சைவம் தழைத்தது. செங்கோல் ஆட்சி நிலவியது. இவர் சிவ பக்தர். இறைவன் உறைவிடங்கட்குச் சென்று இறைவனே