பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 169 காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண்டிருந்த எமை என்றும் கூறிப்போந்தார். உமாபதி சிவம், 'மோகமிக உயிர்கள் தொறும் உடனய் நிற்கும் மூல ஆணவம்' என்றும், 'செம்பினுள் களிம்பேய்ந்து நித்த மூல மலமாய் அறிவு முழுதினேயும் மறைக்கும்' என்றும் கூறுதல் காண்க. தத்துவராய சுவாமிகள், 'செம்பினில் காளிதம் போலப்பினத்துளவே' என்று குறிப் பிடலையும் நோக்குக. இளுதல்தான், 'ஈண்டு மன்னிக்கழியா மடம்” எனப்பட்டது. இதனையும், கழித்தவர் இடங் கழியார் என்பதை இவர் வரலாற்ருல் உணரலாம். தம் அரண்மனையிலிருந்து நெற்களேத் திருடிய சிவனடியாரைக் காவலர் முன் கொண்டு சென்றபோது, இவர், 'இவர் அன்ருே பண்டாரம் எனக்கு” என்று கூறினர். இவருக்கு ஆணவ மலம் மேலிட்டிருப்பின், இவர் இங்ங்னம் கூறுவரோ? மேலும், மதம் முதலியன ஆணவக் குறிகள் என்று சிவஞான முனிவரும், விகற்பம், குரோதம், மோகம், கொலே, மதம் முதலியன ஆணவ மலக் குறிப்புகள் என்று உமாபதி சிவமும் கூறி இருத்தலின், இவை நாயனுர்க்கு இருந்தனவோ? இல்லை. பின் நாயனுரி என் செய்தார் ? நிறை அறிந்த உள்ளத்தால் நெற்பண்டா ரமும் அன்றிக் குறைவில் நிதிப் பண்டார மான எலாம் கொள்ளே முகந் திறைவனடி யார்கவர்ந்து கொள்களன எம்மருங்கும் பறையறையப் பண்ணுவித்தார் படைத்தநிதிப் பயன்கொள்வார் ஆகவே, இவரை, “மடங்கழி இடங்கழி' என்றது சாலப் பொருத்தமே.