பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 காப்புப் பருவம் செருத்துணையர்: இவர் சோழ நாட்டில் தஞ்சாவூரில் வேளாள மரபில் பிறந்தவர். சிவபக்தி, சிவன் அடியார் பத்தி நிறைந்தவர். திருவாரூர் திருக்கோயிலில் மலர்த் தொண்டு செய்து வந்தவர். ஒரு சமயம் கழற்சிங்க மன்னர் (நாயனரும் ஆவார்) மனேவியார் இறைவர்க்குரிய பூவை எடுத்து மோந்ததால் அவ்வம்மையார் மூக்கை அரிந்தவர். பூத்தொண்டு செய்தே முத்தி பெற்றவர். "அருட்கே கருத்துள் தை செருத்துணை' என்று சிறப்பிக்கப்பட்டதன் குறிப்பு, இவர் இறைவர் திருவருட்கே உள்நைந்தவர் என்பதை அறிவித்தற்காகும். இதனைச் சேக்கிழாரும், மெய்தருவார் நெறிஅன்றி வேறென்றும் மேல் அறியாச் சய்தவராம் செருத்துணையார் என்று கூறியுள்ளனர். மேலும், இவர் இறைவர் திருவருளிலேயேதோய்ந்திருந்த மையால்தான், இறைவர்க்கென இருந்த மலரை மன்னன் மனைவியார் மோந்தது.கண்டு பொருராய், கடிது முற்றி மற்றவள்தன் கருமென் கூந்தல் பிடித்தார்த்துப் படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றி 'பரமர் செய்யசடை முடியில் ஏறும் திருப்பூமண் டபத்து மலர்மோந் திடும்மூக்கைத் தடிவன்; என்று கருவியிஞல் அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர் புகழ்த்துனே. : இவர் செருவிலிபுத்துாரில் ஆதி சைவ பிராமணர் மரபில் தோன்றியவர். சிவபெருமானே ஆக மப்படி பூசித்தவர். பஞ்ச காலத்திலும் பரமனைப் பூசித்து வந்தவர். உணவு இன்மையால் உடலும் தளர்ந்தது. அந் நிலையிலும் இறைவர்க்கு நீர் முழுக்கு ஆட்டும்போது, உடலில் வன்மை இன்மையால் குடம் இறைவர் முடிமீது விழுந்து விட்டது. அது கண்டு நடுநடுங்கிக் கீழே விழுந்துவிட்டார். உறக்கமும் கொண்டார். இறைவர் அவர் கனவில் 'தினமும்