பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தராய்ப் பணிவார்கள் 10. பத்தராய் என்றெடுத் தருள்திருக் கவியில் இரு பைங்கோதை யாரைவேட்ட் பான்மைக் கிணங்கஓர் இருபுதல்வி யார்தமைப் பயவாம லே பயந்த சுத்தராய் வன்தொண்ட்ர் இன்தொண்டிர் தழுவித் துதிக்கவைத் தவர்களாய தொகையுளார் என்னும்எழு வகையுளார் பொற்பதம் தொழுதேத் தெடுத்தல்செய்வாம் நித்தராய் மன்றுள் நட்ம் நவில்வார் உவக்கும்வெண் நீற்ருெளி நிலாஒளிஎன நினைந்தனைத் தாங்குக்கு வளைபொலிய இன்தேன் நிரம்பஉண அளிஅடைந்தாங் கத்தராய் கண்மணித் தொடைபொலி தரப்பொலியும் அம்புயத் தவனை நம்பும் - அளவா வளம்துன்று குன்றைநகர் மேய அருள் ஆளியைக் காக்கஎன்றே. (அ. செr.) நித்தராய் அழியாது என்றும் இருப்பவ ராய், மன்றுள் - தில்லைப் பொற்சபையில், நடம் - நடனம், நவில்வார் - பயில்வார், அதாவது மேற் கொண்டவர், குவளை-குவளைமலர், பொலிய-விளங்க, உண-குடிக்க, அளிவண்டுகள், அத்தர் தந்தையாராகிய கிவபெருமான், ஆயஉரிமையுடைய, கண்மணி-உருத்திராக்கம், தொடை-மாலை பொலிதர-விளங்க, அம்புயத்தவன்-தாமரையில் இருக்கும் பிரம்மதேவனை அழகியதோளை உடையவன், நம்பு-விரும்பு, 'நம்பும் மேவும் நசையாகும்மே” என்பது தொல்காப் பியம், அளவா-அளவில்லாத, துன்றும்-சேர்ந்திருக்கும்,ஆளிசிங்கத்தை, பத்தராய் என்பது திருத்தொண்டத் தொகை யின் பத்தாவது பாட்டின் முதல் குறிப்பு: கவி-பாடல்,