பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 181 எந்நெறிச் சென்றதோ! எம்பிரான் அருள் எந்நெறிச் சென்றதோ! எந்தையார் அருள் எந்நெறிச் சென்றதோ' என்று இறைவர் அருளையே சிந்தித்தனர் ஆதலாலும், இவர் துயர் என்பார் சுத்தராய் என்றனர். இவரது தூய தன்மையைச் சிவப்பிரகாச சுவாமிகள், செல்வநல் ஒற்றி ஊரன் செய்யசங் கிலியால் ஆர்த்து மல்லலம் பரவை தன்கண் மாழ்குற அமிழ்த்து மேனும் அல்லுநண் பகலும் நீங்கா தவன்மகிழ் அடியில் எய்தி நல்லஇன் படைந்தி ருப்பன் நம்பிஆ ரூரன் தானே என்று பாடிப் பரவியுள்ளனர். இவர் பெருமிழலைக் குறும்பரால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர். இதனைச் சேக்கிழார், மையார் தடங்கண் பரவையார் மணவாளன்தன் மலர்க்கழல்கள் கையால் தொழுது வாய்வாழ்த்தி, மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில் என்றும், 'பரவை கேள்வன் பாதமுறக் கயிலைப் பொருப்பர் அடிமிடைந்த மிழிலக் குறும்பர்' என்றும் அறிவித் துள்ளனர். சிவப்பிரகாசர், "துறந்த முனிவர் தொழும் பரவைத் துணைவா’ என்றும், பெருமிழலைக் குறும்பர் எனும் பரம யோகி பெரிது உவந்து உன் திருவடித் தாமரை யைப் போற்றி விரை மலர் துாய் வந்தனை செய்கின்ரு ன்' என்றும் அறிவித்துள்ளனர். ஆகவே, சுந்தரர் தூயராக இலர் எனில் இந்நிலையினே அடைய ஒண்னுமோ! சுந்தரருக்குரிய பெயர்களுள் வன்தொண்டர் என்ற பெயரும் ஒன்று. இறைவருடன் வன்மையாகப் பேசிப் பின் தொண்டர் ஆயினமையின் வன்தொண்டர் எனப்பட்டார்.