பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 183 பாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை என இரந்தான் வார்கொள் முலையாய்! நீஅவனை மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்ருர் இப்பாடலாலும் இவர் இன்தொண்டர் என்பது பெறப் படுகிறது. 'பத்தராய்' என்ற பாடலில் உள்ள ஆத்தனே பேரும் துதிக்கப்பட வேண்டியவர்கள். ஆதலின், 'தழுவித் துதிக்க வைத்தவர்கள்' என்ப்பட்டனர். இவர்கள் தொகையடி யார்கள். ஒவ்வொரு தனி அடியார்கள் அல்லர். இப்பாடலில் குறிப்பிடப்பட்ட ஏழுதொகை யடியார்கள் பத்தராய்ப்பணி வார், பரமனேயே பாடுவார்கள், சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள், திருவாரூர்ப் பிறந்தவர்கள், முப்போதும் திருமேனி தீண்டுபவர்கள், முழுநீறு பூசியவர்கள். அப்பாலும் அடிச் சார்ந்தவர்கள். எழுவர் என்னுது எழுவகையுள்ளார், என்று கூறி இவர்கள் தொகையடியார்கள். என்பதை நன்கு உணர வைத்தார். இவர் திருவடிகள் எல்லாப் பேறுகளையும் பெறு தற்கும் வழியாக இருத்தலின் 'பொன் பதம்' என் றனர். இதனுல்தான் சேக்கிழார், அடியார் திருவடிகளைத் தலைமேல் வைப்பாம் என்று கூறிக்கொண்டே செல்வர். இத்தொகையடியார்கள் தனியடியார்களைப் போல் வரலாற்றுக் குறிப்புடையவர்கள் அல்லர். இவர்களேப் பொது வகையில் பற்றிக் கூறவேண்டுமானுல் கீழ் வருமாறு கூறலாம். பத்தராய்ப் பணிவார் என்பவர்கள் அடியார்களைக் கண்டு ஆனந்தம் அடைவர். அவர் பின் சென்று தொண்டு செய்ய விரும்புவர். அவர்களிடம் இன் மொழி பேசுவர். சிவபூசை செய்பவர்களைப் பார்த்துப் பார்த்து இன்புறுவர். தாம் செய்யும் எச்செயல்களையும் சிவார்ப்பணமாகவே செய்வர். சிவபெருமான் சரித்திரங் களைக் கேட்பர். ஈசனை எண்ணி எண்ணி உருகுவர். கண்ணிர் வடிப்பர். உடல் சிலிர்ப்பர். எந்நிலையிலும் இறைவனே