பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 காப்புப் பருவம் மறவர். போலிவேடம் புனேயாதவர். இவை இப்பெரு மக்கள் நிலை. இன்ன ஊரினர், மரபினர் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறப்படா நிலையினர். என்ருலும், நம்பி ஆண் டார் நம்பிகளும் சேக்கிழாரும் இவ்வடியார்களைத் திருவாரூர் இறைவன் திருவடிகளைப் போற்றும் மெய் அன்பர்களே எனக் கூறியுள்ளனர். சேக்கிழார் இவர்களைத் திருவடி போற்றும் த்ொண்டர்கள் என கூறியுள்ளனர். பரானையே பாடுவார் என்பர்கள் தென்மொழி வட மொழிகளைப் பயின்றவர்கள். அப்பயிற்சியால் அரனேயே பாடுவது என்பது உணர்ந்து அவனேயே பாடுவார்கள். இவர் நடராசரைப் பாடுபவர்கள் என்று நம்பியாண்டார் நம்பிகள் குறித்துள்ளனர். "வகுத்த மதில் தில்லை அப்பலத்தான் மலர்ப்பாதம் மேல் உகுத்த மனத்தொடும் பாடவல்லோர்’ என்பது நம்பியாண்டார் வாக்கு. ஆனால், சேக்கிழார் பொதுப்பட, "பன்றியுடன் புட் காணுப் பரமனேயே பாடு வார்' என்றனர். சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர் என்:வர்கள், சிவத்தை அடைந்த உள்ளத்தவ்ர்கள். நம்பியாண்டார் நம்பிகள் இவர்களைப் பொதுவாகச் சிவபெருமானிடம் உள்ளத்தைப் பதியவைத்தவர்கள் என்பதை 'மத்தம் வைத் தான் திருப்பாதக் கமல மலரடிக் கீழ்ச் சித்தம் வைத்தாா' என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனல், சேக்கிழார் பெருமானுர், 'தனிமன்றுள் ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்' எனக் கூத்தப் பெருமானிடத்தில் உள்ளம் வைத்த உறுதியினை உரைத்துள்ளனர். திருவாரூர்ப் பிறந்தவர்கள் என்பவர்கள் திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவருமே ஆவார். இவர்கள் யாவரும் சிவ கணங்கள் என்பது சைவ மரபினர் கருத்து. இவர்களை வெறுஞ்சிவ கணத்தார் என்பர் நம்பி ஆண்டார் நம்பிகள். 'செல்வன் சிவகணத்துள்ளவர்” என்பது அவர் வாக்கு. ஆனல் சேக்கிழார், அவர்கள் கயிலைச் சிவனுர் கணங்கள்