பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிய சீர்மறை நாவன் 11. மன்னிய திருப்பாட்டில் ஆகாரம் முதலிய மறந்திராப் பகல்முயன்று வையத்து வாழ்வார்கள் நோக்காத வண்ணம் நவ மணிஆ லயம்புரிந்து பின்னிய சடைப்பரமர் பிறதளி மறுத்தடை விதம்கண் டுவந்தபூசல் வித்தகர்முன் மேயஎழு வோரும்எம் இதயத்து மேவவ்ைத் தேத்தெடுப்பாம் பன்னியதொகையும்வகையும் முதல் ஆத லால்முதல் பகர்சைவ ரேஅருளினுர் பரவுவிரி இறுதிஆ தலின் இறுதி யார்எனப் படுசைவ ரேஅருளினுர் துன்னிய பொருத்தம்இது என்றுலகம் மகிழ்தரத் தொண்டர்வர லாறனைத்தும் தூவாய் மலர்ந்த அருள் மொழிவான வனே ஆன்ற தோன்றலைக் காக்கஎன்றே (அ. சொ.) பன்னிய-சிறப்பித்துச் சொல்லிய, தொகைஎன்பது சுந்தரரது திருத்தொண்டத் தொகை, வகை-நம்பி ஆண்ட்ார் திருத்தொண்டர் திருவந்தாதி, பகர்-கூறு பரவுபோற்றப்படும், விரி-விரிநூல், இறுதி என்பது தொகை வகை விரி என்னும் முறைவைப்பில் இறுதியாக இருப்பது, துன்னிய-நெருங்கிய, துர-சுத்தமான, வானவன்-உயர்ந் தவன், தேவ்ன், ஆன்ற-அறிவு, பண்பு முதலானவை நிறைந்த தோன்றல-மக்களுள் சிறந்த சேக்கிழாரை, மன் னிய திருப்பாட்டு என்பது திருத்தொண்டத் தொகையின் பதிஞேர்ாவது பாட்டின் முதற் குறிப்பு. வையத்து உலகில் வண்ணம்-முறையில், நவ-புதிதான, மணி-அழகிய, பரமர்ஒவபெருமான், தளி-கோவில் அ-ைஅ-ைத்தி, உவந்த