பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 காப்புப் பருவம் மகிழ்ந்த, பூசல் வித்தகர்-பூசலாராகிய அறிஞர், எழுவோர்பூசலார். மானியார், நேசர், கோச்செங்கண்ணர், திருநீல கண்ட யாழ்ப்பாணர், சடையர், இசை ஞானியார். - விளக்கம் : சுந்தரர் அடியார்களைப்பற்றிப் பாடிய பாடல்கள் பதினென்று. இப்பாடல்கள் அடங்கிய பதிகம் திருத்தொண்டத் தொகை என்றே கூறப்படும். ஆகவே, இது தொகை நூல் பகுப்பைச் சார்ந்தது இத்தொகைப் பதிகத்தில் பதினெரு பாடல்கள் இருக்க, நம்பியாண்டார் நம்பி பாடியுள்ள திருத்தொண்டர் திருவந்தாதியில் எண்பத் தைந்து பாடல்கள் உள. ஆகவே, தொகை நூலை வகைப் படுத்திய முறையில் அமைந்துள்ளது திருத்தொண்டர் திரு வந்தாதி என்பது பெறப்படுகிறது. ஆனால், சேக்கிழார் பெருமானுர் பாடியுள்ள பெரிய புராணம் 4276 பாடல்களைக் கொண்டுள்ளது. ஆகவே, இது விசிநூல் என்பது நன்கு தெளி வாகிறது. இவ்வாறு நூல்கள் தொகை, வகை, விரியாக அமைதல் உண்டு என்பதைத் தொல்காப்பியம், தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததர்பட யாத்தலோ டனைமர பினவே என்று சுட்டிக்காட்டுகிறது. வகைநூல் என்ற குறிப்பு இந் நூற்பாவில் இல்லையே எனில், அதனேக் குறிப்பாக ஆசிரியர் தொல்காப்பியர் குறித் தார் என்று கோடல் வேண்டும். தொகை நூல் செய்தவர் சுந்தரர். அவர் ஆதி சைவ அந்தண மரபினர். இதனைச் சேக்கிழார், 'மாதொரு பாக ஞர்க்கு வழி வழி அடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி” என்று சுந்தரர் பிறந்த மரபைச் செப்பியுள் ளனர். சுந்தரரும் தம் மரபு ஆதி சைவ மரபினர் என்ற குறிப்பைத் தம் வாக்கால், 'அல்லியம் தாமரைத்தார் ஆரூரன் என்று பாடிக் காட்டியுள்ளார் தாமரை மாலை அந்தணர்கட்குரியது. மேலும், அவரே மறையவர் தம்