பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó0 பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி கவிராச பண்டாரத்தையா அவர்கள் இலஞ்சி வேலவன் மீது திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளனர். அப் பிள்ளைத் தமிழ்க் காப்புப் பருவத்தில் திருமால், சிவபெரு மான், உமையம்மை, உச்சிப் பிள்ளை யார், திருமகள். நாமகள், பிரமன், காளி, வள்ளி, தெய்வயாளே. கன்னிமார், சத்தமாதர், வீரபத்தினர், வையிரவர் தேவதைகள், அட்ட வசுக்கள், ஏகாதசருத்திரர் அசுவனி தேவதைகள், சந்திர ன் ஆதித்தர் பதினெண்கணம், சத்த ரிஷிகள் ஆகியோர்க்கு வணக்கம் கூறிப் பத்துப் பாக்களைப் பாடியுள்ளனர். திரு சொக்கலிங்க ஐயா அவர்கள் பாடியுள்ள திருநாவுக் கரசர் பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் சிவபெருமான், உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், திலகவதியார், சம்பந்தர், வாகீசர், சுந்தரர், மணிவாசகர், சண்டேசர் அப் பரைக் காக்க எனக் காப்புப் பருவத்தைப் பத்துப் பாடல் களில் பாடியுள்னனர். (ஈண்டு வாகீசர் என்பவர் திருநாவுக் கரசர் முன் பிறவியில் வாகீச முனிவராக இருந்த திருவுரு வத்தினர் ஆவார்.) திரு சொக்கலிங்க ஐயா அவர்கள் தாம் பாடிய சுந்தர மூர்த்தி பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில், சேக்கிழார் பிள்ளைத் தமிழ்க்குக் காப்புக் கடவுளராகச் சுந்தரர் குறிப்பிட் டுள்ள நாயன்மார் அமைந்திருப்பது போலச் சைவ நாயன் மார்களையே காப்புக் கடவுளராக அமைத்துக் காப்புப் பருவத்தை முடித்துள்ளனர். சாமி கவிகாளருத்திார் பாடிய அழகர் பிள்ளைத் தமிழில் பழிச்சினர் பரவல் என்னும் தலைப்பின் கீழ் ஆழ்வார்களையும் எம் பெருமாளுர் வேதாந்ததேசிகர், மனவாளமா முனிவர் ஞானசிரியர், அடியார்கள் மீது பாடல்களைப் பாடிப் பின் காப்புப் பருவத்தில் பதினேரு பாடல்களையும் பாடியுள்ளனர். இன்னேரன்ன முறைகளைக் காணும்போது காப்புப் பருவ அமைப்பு, அவ்வவ் ஆசிரியர்களின் மனப்போக்கிற்கு அமையப் பாடப்படும் என்பது புலனதல் காண்க,