பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 201 மற்றும் ஓர் அறிவுத்திறன் ஆலயத்தைக் கட்டத் தொடங்கியது. இதனையும் அருண்மொழித்தேவர், சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி நாதனுக் கால யம்செய் நலம்பெறு நன்னுள் கொண்டே ஆதரித் தாக மத்தால் அடிநிலை பாரித் தன்பால் காதலில் கங்குற் போதும் கண்படா தெடுக்க லுற்ருன். என்று அறிவித்துள்ளார். இதனுல்தான் இவரை ஈண்டுப் 'பூசல் வித்தகர்” என்றனர். சேக்கிழாரின் கட்டடச் சிற்பக் கலையினையும், நுண்ணறி வுத் திறனையும் பூசலார் புராணத்தில் பாடியிருப்பதால் அறியலாம். ஈண்டு ஒர் அரிய கருத்தை நினைவு கூர்தல் சாலச் சிறந்த தாகும். அதாவது பூசலார் கோவிலைத் தம் மனத்தால் கட்டி ர்ை என்பதன் உட்கருத்தை என்க. இதனை அப்பர் பெரு மானுர் திருப்பாடலே நினைவுகொண்டு சிந்தித்தால் உண்மை நன்கு புலகுைம். அப்பாடல், - காயமே கோயி லாகக் கடிமனம் அடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப் பூசனே ஈச ஞர்க்குப் போற்றஇக் காட்டி னேமே. என்பது. மங்கையர்க்கரசியாக்: இவ்வம்மையார் சோழ மன் னனது திருமகளார். நின்ற சீர் நெடுமாறரது வாழ்க்கைத் துணைவியார். பாண்டிய நாட்டில் பரவிய சமண சமயத்தை மாற்றித் திருஞான சம்பந்தர் துணைகொண்டு சைவ சமயத் தைப் பரவச் செய்தவர். திருஞானசம்பந்தர் பதிகத்தில் போற்றப் பட்டவர், திருநீற்று நெறியை வளர்த்தவர். தம் நாயகர்க்கு நல்ல வழித்துணையாய் அமைந்து சிவனருள் பெற்றவர்.