பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 203 பெருமானே வணங்கினர். தில்லைவாழ் அந்தணர்கட்குத் தி. மாளிகைகளைக் கட்டினர். இம்முறையில் திருத்தொண்டு களைச் செய்து இறையடி உற்றனர். திருநீலகண்ட யாழ்ப்பானார்: இவர் திரு எருக்கத்தம் புலியூரில் பிறந்தவர். இறைவர் புகழை யாழில் மீட்டி வாசித்து இன்பம் உற்றவர். திருக்கோயில் தோறும் இப் பணியினைப் புரிந்து வந்த இவர், மதுரைத் திருக்கோயில் வாயிலில் நின்று யாழை வாசித்தபோது, சொக்கலிங்கப் பெருமான் ஆலய அன்பர்களிடம் அவரை உள்ளே அழைத்து வரும்படி கனவில் கூறினர். இவர் தரையில் நின்று வாசிப்பின் யாழின் வீக்கு அழியும் என்று அவர்க்குப் பலகை இடுமாறும் கட்டளை இட்டனர். அவர்கள் பொற்பலகை தர அதன்மீது இருந்து யாழை வாசித்தார். பின்னர்த் திருவாரூர் சென்று இறை வரைப் பாடினர். இவர் பாடுதற்காகவே வடக்கு வாயில் அங்கு ஏற்பட்டது. பின்னர்ச் சீர்காழிக்கு வந்து திருஞான சம்பந்தரது நட்பைப் பெற்று அவர் பாடும் பதிகங்களேத் தம் யாழில் மீட்டி வாசிக்கும் பேறு பெற்றபின் அவருடன் திருநல்லூர் ப் பெருமனத்தில் சோதியில் கலந்தனர். சடையனுர் : இவர் சுந்தரரைத் திருமகனுராகப் பெறும் பேறு பெற்றவர். முப்போதும் திருமேனி திண்டிப் பூசிக்கும் ஆதிசைவப்பிராம்மண வகுப்பினர். இசை ஞானியார்: இவர் சடையஞரின் மனேவியார்: சுந்தரரின் தாயார். இவ்வெழுவர்களையே மேய எழுவோர்' என்றனர். இவ்வெழுவர்களையும் சேக்கிழார் ‘பூசலார் பொற்ருள் போற்றி, பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவலுற் றேன், நேசர்கழல் வணங்கி, செங்கட்சோழர் தம் மலர்த் தாள் வாழ்த்தி, பெரும் பாணர் மலர்த்தாள் வாழ்த்தி என்று வாழ்த்திப் போற்றியது போலத் திரு பிள்ளே அவர்