பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 செங்கீரைப் பருவம் 'பெறுமிழலைக் குறும்பர்எனும் பரம யோகி பெரிதுவந்துன் திருவடித்தா மரையைப் போற்றி விரைமலர் தூய்வந்த ைசெய்கின்ருன்’’ என்று பாடியருளினர். இவற்றிற்குக் காரணம் தொண்டர் அத்துணை அருமையானவர் என்பதனால் அன்ருே? தொண்டர்கள் பெருமையுடையவர் என்பது குறித்துப் பாரித்துக் கூறவேண்டா. பெருமைக்கே உறைவிடமானவர் கள். தொண்டர்கள் இறைவனே நாடவேண்டும் என்பதும் இல்லை. இறைவனே தொண்டர்கள் இல்லம் தேடிச் செல்வன். 'பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே' என்ற மணி மொழியார் வாக்கையும் காண்க. சிறுத்தொண்ட நாயனர் இல்லத்திற்கு இறைவன் செல்கின்ருர். செல்கின்ற போது எவ்வாறு சென்ருர் தாம் வழியில் காண்பாரை எல்லாம் 'சிறு த் .ெ தா ன் டர் நீர்தாமோ?' என்று வினவிக் கொண்டே சென்ருர் அல்லரோ? எங்கும் நிறைந்துள்ள இறைவர்க்கு-எல்லாம் அறிந்த இறைவர்க்கு-சிறுத்தொண் டர் இல்லம் தெரியாமலா போயிற்று? தெரிந்திருந்தும் ஏன் கண்டாரைச் சிறுத்தொண்டர் மனையை வினவிக்கொண்டே சென்ருர் தொண்டருடைய அருமையும் பெருமையும் எவர்க்கும் நினைவுபடுத்தவே அன்ருே? இதனை அன்ருே சேக் கிழார் பெருமானுர், தண்டாத தொருவேட்கைப் பசியுடையார் தமைப்போலக் கண்டாரைச் சிறுத்தொண்டர் மனேவினவிக் கடிதணைந்து தொண்டானுர்க் கெந்நாளும் சோறளிக்கும் திருத்தொண்டர் வண்டார்பூந் தாரார்.இம் மனைக்குள்ளா ரோஎன்ன என்று குறிப்பிட்டுள்ளார்? தொண்டர்கள் பெருமைக் குரியவர் என்பதையும் சேக்கிழார் நன்கு உணர்ந்தவர் ஆதலின்,