பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 செங்கீரைப் பருவம் (History of India Part I Page 18) orgârgy grapÉlujāroritif. இதன் பிறகே ஆரியரின் ஏனைய வேதங்கள் வந்துள்ளன. மேலே கூறிய வரலாற்றுப் பேராசிரியரே இதற்குத் தெளிவு கூறுகின்றனர். சமவேதத் தோற்றத்தினைப் பற்றிக் & so cou?so The Samaveda is only a seletions of hymns from Rigveda set to music for being chanted by singers trained to the task argård & gy@@rf. Gö9 s5sraúsàr 25 ஆம் பக்கம் காண்க.) அதன் பின் அதர்வ வேதத்தைப் r 1 fò fõ]ă g, (pl fï¿5Tôi), The A th ervaveda, reckon ed as pertaining to the Brahman, the priest who superintended the entire sacrifice is miscellaneous is charactor the most valuabic for history and sociology ofter the Rigveda என்றனர். இந்தவாருண பாகுபாட்டு முறைகளை எல் லாம் பார்க்கும்போது யஜுர் வேதத்தின் தோற்றமும் பிற் பட்டது என்பது புலனாகும். இதனால் வடமொழியில் நான்கு வேதங்கள் ஆதியில் இல்லை என்பதும், நான்கு வேதங்கள் என்ற பாகுபாடு பின்னல் தோன்றியது என்பதும் பெறப் படுகின்றன. வேதங்களை நான்காகப் பகுத்தவர் வேத வியாசர் என்ற குறிப்பினே வில்லிபுத்துரார் தம் பாரத நூலில், 'தோத்திரமான தெய்வச் சுருதிகள் யாவும் நான் காக் கோத்தவன்” என்று கூறியுள்ளதையும் காண்க. நச்சிஞர்க் கினியரும் 'பின்னர் வேதவியாதர் சின்னுன் பல்பிணிச் சிற்றறிவினேர் உணர்தற்கு நான்கு கூருக இவற்றைச் செய்தார் ஆதலின்” என்றனர். ஆகவே, தொல்காப்பியர் குறிப்பிடும் மறை தமிழ் மறையே என்பதும், தமிழில் நான்மறை என்று கூறப்பட்டு வரும் இடங்களில் எல்லாம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பொருள் பற்றிக் கூறப்பட்டு வந்த நூற்கள் என் றும் கொள்ளுதல் வேண்டும். இந்த நான்மறைப் பொருள் களையே இறைவனர் கல்லாலவிருட்சத்தின் கீழ் இருந்து சனகாதி முனிவர்கட்கு உபதேசம் செய்தருளினர். இதனைத் திருவாசகம் தெள்ளத் தெளிய எடுத்து மொழிகிறது.