பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 செங்கீரைப் பருவம் தகையது என்பார் போன்று, ஈண்டுப் பிள்ளை அவர்கள், 'வெப்பரிய முழுமதிக் குடைநிழற்று அநபாயன்' என் றனர். சே க் கி ழ ார் பெருமானரும் மனுச்சோழனது குடையினே, 'தண்ணளி வெண்குடை' என்று கூறியுள்ள தையும் காண்க. 'அநபாயன் மோ அவையில் உள்ளார் மெய்ப் பாட்டிளுேடு பாராட்டி மகிழ' என்று கூறியதும் இந்நூல் அரங்கேற்றப் பட்டபோது, மக்கள் கொண்ட மனநிலையின் மாண்பைப் புலப்படுத்துவதாகும். மெய்ப்பாடு இன்னது என்பதை, 'உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்த வாறே, புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்ருன் வெளிப் படுதல்' என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சிஞர்க்கினியர் விளக்கியுள்ளார். இம் மெய்ப்பாடுகள் எவ்வெம் முறையில் வெளிப்படும் என்பதை ஒல்காப் பெருமையுடைய தொல் காப்பியம், நகையே அழுகை இனிவ்ரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப என்று கூறுகிறது. க் இத்தகைய மெய்ப்பாடுகளுள் சிவ மெய்ப்பாடுகளை காட்டி அவையினர் தொண்டர் புராணத்தைச் செவிமடுத்த காரணத்தைக் கொண்டே ஈண்டு, 'மெய்ப் பாட்டினுெ! பாராட்டி மகிழ' என்று கூறப்பட்டது.

இங்ஙனம் மெய்ப்பாட்டினுடன் பாராட்டி மகிழ்ந்தனர் அவையினர் என்பதை , மருவுதிரு முறைசேர்ப்பார் எழுதுவார் இருந்து வாசிப்பார் பொருளுரைப்பார் கேட்டிருப்பார் மகிழ்ந்து சிரமசைத்துக் கொண்டாடிக் குதுகலிப்பர் சிரிப்பார் தேனிப்பார் குன்ற்ைமுனி சேக்கிழார்.செய்த