பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 235 ஞானத்தைக் கொடுப்பது என்பதாம். நிருவாணம்மோட்சம், முத்தி, முத்தி-மோட்சம், திருமுகம்-கடிதம், உய்த்திடப் பெற்ற-கொண்டுவந்து கொடுக்கப் பெற்ற, நிலையது-இருப்பிடம், உமாபதிசிவம்-உமாபதி சிவாசாரியார், அளவா-அளவிட முடியாத, மெய்ஞ்ஞானம்-தத்துவஞானம், அற்புதம்-வியக்கத் தக்க செயல்கள், நேயம்-அன்பு, விருப்பம், இம்மை. இப்பிறப்பில் அனுபவிக்கும் இன்பம், மறுமை-மறு பிறப்பில் அனுபவிக்கும் இன்பம், மான்மியம்-பெருமை. விளக்கம்: தில்லைச் சிதம்பரத் தலத்துள் திருவம்பலம் பொன்னுல் வேயப்பட்டது. இங்ஙனம் இது பொன்ன ல் வேயப்பட்டது என்பதற்குரிய குறிப்புக்கள் பல சரித்திர வரலாறுகளாலும், தேவாரத் திருமுறைகளாலும் அறியப் படுகின்றன. திருப்புறம்பயக் கல்வெட்டினல் விக்கிரம சோழவள நாட்டின் அரசரான குலோத்துங்கர் சிதம்பரப் பேரம்பலம் பொன் வேய்ந்தமை புலனுகிறது. "சேயவன் திருப்பேரம்பலம் செய்ய துரிய பொன்னணி சோழன்' என்று சேக்கிழார் கூறியுள்ளதையும் காண்க. அவரே மீண்டும், 'தில்லைத் திருவெல்லே பொன்னின் மயமாக்கிய வளவர் போர் ஏறு” என்று பாடியுள்ளதையும் காண்க. இதனுல் சேக்கிழார் பெருமானது வரலாற்றுப் புலமையும் நன்கு புலனுகின்றது. இவற்றை எல்லாம் உட்கொண்டே, 'துய ஒளி இருள் தபு பொன் மாளிகைத் தில்லை' என்று கூறப் பட்-டெது:. பெத்தான் சாம்பான் ஓர் ஆதித் திராவிடன். அவனுக்கு நிர்வாண தீட்சை செய்து முத்திப் பேறு அருளத் தில்லை நடராஜப் பெருமான் ஒரு கடிதம் உமாபதி சிவாசாரியாருக்கு எழுதி அனுப்பினர். அத் திருமுகப் பாசுரம், அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு-படியின்மிசை பெத்தான் சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து முத்தி கொடுக்க முறை ’’ என்பது.