பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 செங்கீரைப் பருவம் குரவர்கள் பூரீ மெய் கண்ட தேவர். ரீ அருள்நந்திசிவம், பூ மறைஞான சம்பந்தர், ரீ உமாபதி சிவாசாரியர். பூரி உமாபதி சிவாசாரியாரால் நியமனம் பெற்றவர் ரீ அருள்நமச்சிவாயர். இவர்பால் தீட்சை பெற்றவர், சித்த மூர்த்திகளாகிய பூர் சிவப்பிரகாசர். இவர் பூர் பஞ்சாட்சர மூர்த்திகள் என்று போற்றப்படும் பூர் நமச்சிவாய மூர்த்தி களைத் திருவாவடுதுறையில் ஆதீன முதல்வராக நியமித்தனர். அதனுல் இவ்வாதீனம் பூர் பஞ்சாட்சர தேசிகர் ஆதீனம் எனப் பெயர் பெற்று விளங்குகிறது. பூரீ மெய் கண்ட நாயனர் முதல் பூர் நமச்சிவாய மூர்த்திகள் வரையுள்ள இந்த ஆசாரிய பரம்பரை பூதபரம்பரை எனப்படும். முன் கூறிய தேவ் பரம்பரையும், இப்பூதபரம்பரையும் உபதேச பரம்பரை எனப்படும். இதற்கு மேல் விளங்கிவருவது அபிஷேக பரம்பரையாகும். இம்மரபு முறைகளை எல்லாம் உள்ளடக்கியே ஆசிரியர் கைவாய அப்பரம்பரை' என்றனர். இக் கைலாய பரம் பரையில் இதுபோது திருவாவடுதுறையில் இருபத் தோராவது குருமகா சந்நிதானமாக அருள் செங்கோல் நடத்திக்கொண்டு ஞானதானம், பொருள்தானம் ஆகிய வற்றை வரையாது அருள் செய்து கொண்டு சைவசமயத்தை ஒம்பி வரும் பரமாசாரியர் பூரீ ல பூரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார். இவை அனைத்தையும் உட்கொண்டே, நடன நாதர் உமாபதி சிவன்' என்று உமாபதி சிவனுர் பெருமையினை ஈண்டுச் சிறப்பித்தனர். இவர் சேக்கிழார் வரலாற்றைப் பாடிய அருமையினே 'நினது வரலாறு பாராட்டி அருள்செய’ என்று குறிப்பிட்டனர். உமாபதி சிவனர் சிறந்த மெய்ஞ் ஆாகி. இந்தன மரபினர். அத்தகையவரே சேக்கிழார் வர லாற்றைப் பாடியுள்ளார் எனில், சேக்கிழார் பெருமை அளவிடற்கரியதன்ருே! அதனல் 'மான்மியம் அடைந்தாய்ட் என்று ஈண்டும் சிறப்பிக்கப்பட்டார். சேக்கிழார் வரலாறு இம்மைக்கும் மறுமைக்கும் ஆதார நிலையது என்றதையும் கூர்ந்து கவனிக்க.