பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 259 துரக்கு சீர்த்திருத் தொண்டத் தொகையினை வாக்கி ல்ைசொல்ல வல்ல பிரான் எங்கள் பாக்கி ய்ப்பய னய்ப்பதி குன்றைவாழ் சேக்கி ழானடி சிந்தை இருத்துவாம் என்றும் போற்றி, தம் உளத்தில் கொண்டுள்ளமையினை நோக்கும்போது அன்பர் அகத்தெல்லாம் சேக்கிழார் அமர்ந் துள்ளனர் என்பது புலளுகிறது. (19) 9. இவர்சரி யையர் இவர் கிரியையர் யோகத் தினர் இவர் இவர்ஞான இயல்பினர் இவர் இல் லறத்து வழாதவர் இவர்துற வறம்நின்ருச் கவர்மனம் மொழிஇவர் பிரமச ரியநிலை கைகொண் டோர்இவரே கண் குளிர் வேடம் பொருள் என நம்பினர் கருதரும் இவர் ஆதித் தவர்நிலை உணரா அருளினன் இறைவன் தக்கன உலகறியச் சாற்றினன் அவன் அவ னேஉல கறியச் சாற்றிய படிஎன்ன அவரவர் செயல்முதல் அருளிய வல்லவ ஆடுக செங்கீரை ஆரருள் ஆகர சேவையர் காவல ஆடுக செங்கீரை (அ. சொ.) சரியையர்-சரியை என்னும் மார்க்கத்தை மேற்கொண்டவர், கிரியையர்-கிரியை என்னும் நிலையை மேற்கொண்டவர், யோகத்தினர் - யோகமார்க்கத்தினை மேற்கொண்டவர், ஞான இயல்பினர்-ஞானமார்க்கத்தில் ஒழுகியவர், வழாதவர்-தவருதவர், கவர்-மாறுபட்ட, ஆதிமுதலிய, சாற்றியபடி-கூறியவிதமே,