பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தாலப் பருவம் காமிகம், சிந்தியம், சுப்ரம் என்பன. ருத்ர பேதத்தில் அடங்கியவை வீரம், வாதுளம், காலோத்தரம், மகுடம் என்பன, இவ்வொன்பது குருபரம்பரையில் பெற்றவை. இவ்வொன்பான் ஆகமங்களை இறைவன் இன்னின்னர்க்கு உபதேசம் செய்தான் என்பதைத் திருமூலர், சிவமாம் பரத்தினில் சத்தி, சதாசிவம் உவமா மகேசர், உருத்திர தேவர், தவமால், பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவ ஆ கமம் என்று அறிவித்தனர். ஆ-பாசம் க-பசு, ம-பதி என்று பொருள் படுதலின், முப் பொருளே உணர்த்தும் நூல் ஆகமம் என்பதாயிற்று. அன்றி, ஆ-சிவஞானம், க-மோட்சம், ம-மலநாசம் என்றும் பொருள் படுதலின் ஆன்மாக்களின் மலத்தை நாசம் பண்ணி, சிவஞானத்தைத் தோற்றுவித்து மோட்சத்தைக் கொடுத்தல் பற்றி ஆகமம் என்ற பெயரைப் பெற்றது எனினும் ஆம். ஆகமம் அறிவனுாலும் ஆகும். இதனை 'ஆகமம் என்பது மனுமுதலாகிய அறளுெடு புணர்ந்த திறன் அறிநூலே” என்ற தண்டி அலங்கார நூற்பாவால் தெளிக. இன்ஞேரன்ன ஆக்மம் பற்றிய பேர் அறிவினைச் சேக் கிழார் பெருமானுர் பெற்றவர் ஆதலின், சகலாகம பண்டித' என்றனர். வேதசாத் திரங்களைப் பயின்றவர் என்ற பொருளையும் இத் தொடர்க்குக் காண்க. ஆகமம், வேதம் என்ற பொருளையும் உகிையது. சேக்கிழார் பெருமாளுர் சகலாகம பணடிதர் என்பதற் குரிய அகச்சான்றுகள் பல அவர் யாத்த பெரியபுராணத்தில் பரந்து கிடக்கின்றன. தில்லைவாழ் அந்தணர்கள் புராணத்து