பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள் வைத் தமிழ் நூல் ஆராய்ச்சி ل ) سيلي இதுவரையில் கூறப்பட்டுவந்த கருத்துக்களால், பிள்ளேத் தமிழ் பாடும் வழக்கம் சங்ககாலம் முதல் இடைப்பட்ட காலமாகிய பெரிய புராணம் காலம் வரையில் இருந்து வந்தது என்பது பெறப்படுகிறது. ஆனால், பிள்ளைத் தமிழ்ப் பருவங்கள் பத்தும் அமையத் தனி நூலாகப் பாடப்பட்ட காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டு முதல் என்பது ஒட்டக்கூத்தர் குலோத்துங்கள் மீது பாடிய பிள்ளைத் தமிழ் மூலம் தெரியவருகிறது. இதற்குப் பின்பே பாட்டியல்காரர்கள் இந்த வகையான நூலுக்கு இலக்கணம் வகுக்கப்புகுந்தனர் போலும்! இல்விலக்கணங் களால் பிள்ளைத் தமிழ் நூல்கள் பல தோன்றலாயின. கி, பி. பன்னிரண்டாம் நூற்ருண்டில் ஒட்டக்கத்தர் இயற்றிய குலோத் துங்க சோழன் பிள்ளைத் தமிழே பிள்ளைத் தமிழ்க்குரிய எல்லாப் பருவங்களும் அமைந்த முதல் பிள்ளை தமிழ்நூல் என்னலாம். அதற்கு அடுத்தாற்போல் கொடிக் கொண்டான் பெரியான் அதிச்சதேவன் பாடிய காங்கேயன் பிள்ளைத் தமிழைக் கூறலாம். இதற்கு அடுத்தாற்போல் பழைமையானதாக அந்தகக் கவி வீரராகவ முதலியார் பாடிய சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் நூலைக் காட்டலாம், இது கி. பி. 1654 ஆம் ஆண்டு பிள்ளைத் தமிழ் நூல். ஏனைய ஆணபால் பிள்ளைத் தமிழ் நூல்களும் பெண்பால் பிள்ளைத் தமிழ் நூல்களும் மேலே காட்டிய பிள்ளைத் தமிழ் நூல் களுக்குப் பிற்பட்டவையே. இனி இதுவரைத் தெரிய வந்துள்ள பிள்ளைத் தமிழ் நூல் களையும் பார்ப்போமாக. நூலின் பெயர் ஆசிரியர் கலைைைசச் செங்கழுநீர் விநாயகர் -சிவஞான முனிவர் பிள்ளைத்தமிழ் சென்னை விநாயகர் பிள்ளேத்தமிழ் -கச்சியப்பமுனிவர் தேசிய விநாயகர் பிள்ளைத் தமிழ் -கணபதி ஆச்சாரி (இம்முன்றும் விநாயகப் பெருமான் மீது பாடப் (هله6m-سائناu