பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 303 பொங்கிய இருளை ஏனைப் புறஇருள் போக்கு கின்ற செங்கதி ரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம் என்று விளக்கிப் போந்தார். இதனேயே 'இன்பம் அடைவதுவே பயன்' என்றனர். இன்பம் என்பது மெய்ஞ்ஞான இன்பமே ஆகும். சற்சங்கம் நிறைந்தபதி குன்றத்துார் ஆதலின் சங்கம். மரீஇ அமர் குன்றை” என்றனர். அங்குப் பல சங்கங்களே இதுபோதும் நிறுவிப் பல சமய சமூக வளர்ச்சிக்கு, அங்குளார் பாடு படுவதை நேரில் காணலாம். தொண்டர்புராணத்துள் பற்பல அற்புதங்கள் நிறைந் துள்ளன. ஆன்கன்றும், அரசிளங்கன்றும் மந்திரியும் உயிர் பெற்று எழுந்தனர். திருநீலகண்ட நாயனரும் அவர்தம் மனைவியாரும் மேவியமூப்பு நீங்கி விழிப்புறும் இளமை எய்தினர். அப்பர் சம்பந்தர், சுந்தரர் செய்த அற்புதங் கட்கு அளவில்லே. இங்கனம் பல அற்புதங்களைத் தொண்டர் புராணம் கொண்டது. ஆதலின், "அற்புதம் மேவிய தொண்டர் புராணம்' என்றனர். சேக்கிழார் மன்னவன் சீவக சிந்தாமணியில் கொண்டிருந்த பற்றினேப் போக்கித் தொண்டர் புராணத்துள் அப்பற்றினைக் கொள்ளுமாறு செய்து, அவனேப் புறச் சமயத்தில் விழாதவாறு செய்து, சைவசமயத்தில் ஈடுபாடுகொள்ளச் செய்த காரணத்தால் "கருணைக்கடலே’ எனப்பட்டனர். (27)