பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அடியார் பெருமையும் அருமையும் நாளும் அறிஅம் பலவாணர் அவர்வர லாறு விரித்துரை செய்பவர் ஆரென உட்கருதிக் கடியார் மற்றவர் அன்பத் தனையும் கண்காண் படிசெய்து காமரு முதலும் எடுத்தரு வினர் இக் கடல்சூழ் புவிஇடைஇப் படியார் பெற்ருர் தமிழ்மான் மியம்.எப் பாட்ைக ளுக்குளதிப் பாக்கியம் நம்தவம் என்று பலோரும் பகரப் படுவதிந் தடியார் தடிசூழ் குன்றைத் திருமுனி தாலோ தாலேலோ சைவப் பயிர் தழை பத்தழை யும்புயல் தாலோ தாலேலோ (அ. சொ. அம்பலவாணர் - நடராசப் பெருமான், கடியார் - விளக்கம் அமைந்த, அருள் புரிந்த, கண் - ஞானக்கண், காண்படி - காணும் படி, காமரு - அழகிய, முதலும் - உலகெலாம் என்ற முதல் தொடரையும், புவி - பூமி, பாடைகள் - மொழிகள், பலோரும் - பலபேரும், பகரப்படுபவ - சிறப்பித்துக் கூறப் படுபவரே, தீம்-இனிய, தடி - கரும்பு, ஆர் - பொருந்திய, தடி - வயல். விளக்கம்: இறைவர் அடியார்களுடைய பெருமை யையும் அருமையையும் நன்கு அறிந்திருந்தமையால் தான், அவ்வப்போது, அவர்கட்கு ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் போக்கி அருளினர். அடியார்களின் பெருமையும் அருமை யும் அறிந்ததனுல் அன்ருே, திருநாளைப் போவார்க்கும், தில்லைவாழ் அந்தணர்கட்கும் கீழ்வரும் கட்டளை இட் டருளினர்.