பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 தாலப் பருவம் பால்படும். இவ்வணிகளுக்கும் உரிய இடங்கள் பலவற்றைச் சேக்கிழார் பெருமாளுர் தம் நூலில் காட்டியுள்ளார். வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச் செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத் தெம்பிரான இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி உம்பர் நாயகற் கன்பரும் ஒக்குமால் என்று இடத்து உவமையணியும், கயல்பாய்பைந் தடநந்துள்ன் கழிந்தபெருங் கருங்குழிசி வியல்வாய்வெள் வளைத்தரளம் மலர்வேரி உலைப்பெய்தங் கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும் வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம் என்ற இடத்து உருவக அணியும் இருத்தலேக் காணலாம். ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணிஅலா தொன்றிலார் ஈர அன்பினர் யாதும் குறைவிலர் வீரம் என்னல் விளம்பும் தகையதோ என்பது தன்மை அணிக்கு ஏற்ற எடுத்துக் காட்டு. அந்நிலையே உயிர்பிரித்த ஆன்கன்றும் அவ்வரசன் மன்னுரிமைத்தனிக் கன்றும் மந்திரியும் உடன் எழலும் இன்னபசி சாளுன்னன் றறிந்திலன்வேந் தனும்யார்க்கும் முன்னவனே முன்நின்ருல் முடியாத பொருள் உளதோ இச் செய்யுள் வேற்றுப் பொருள் வைப்பணிக்கு உதாரண மாகும். மாமறை விதிவ ழாமல் மனத்துறைக் கடன்கள் ஆற்றித் துரமறை மூதுார்க் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்பத் தேமரு தொடையல் மார்பன் திருமணக் கோலம் காணக் காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான்