பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 தாலப் பருவம் உலகெ லாம்.உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியின் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் என்ற பாடலில், இறைவன் அருவம், உ ரு வம் அருவுருவம் என்ற வடிவில் திகழ்பவன் என்பதையும், அங்ங் னம் மூவகைத் திருமேனியுடையவன் ஆயினும், வாழ்த்து தற்கும், வணங்குதற்கும் உரியவன் என்பதையும் அறிவித் திருத்தலின், விழுமியது பயத்தல் என்ற அழகு அமைந்திருத் தலைக் காணலாம். சண்டேசுர நாயனுருடைய தந்தைக்கு நல்ல உவமை யைக் காட்டுகிருர் சேக்கிழார். இவனப் பாம்பிற்குச் சம மாக்குகிருர். பாம்பு ரத்தினத்தையும் தருகிறது. விடத் தையும் கக்குகிறது. அதுபோலச் சண்டேசுர நாயனரின் தந்தையான எச்சதத்தன் இரத்தினம் போன்ற சண்டே சுரரைத் தந்தனன்; விடத்தைக் கக்குவது போலச் சண்டேசுர நாயனர் செய்த சிவபூசைக்கு இடர் செய்தனன். இதன விளங்கு உதாரணத்தால் விளக்க வேண்டுமென்பதற் காகவே சேக்கிழார், அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவுபோல் இருமை வினைக்கும் ஒருவடிவாம் எச்ச தத்தன் உளளுளுன் என்று பாடியருளினர். இவ்வாறெல்லாம் சேக்கிழார் பெருமாளுர் பத்தழகு களும் தம் நூலில் அமையப் பாடிய காரணத்தால்தான் ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள் 'விளம்பு வனப்பினெடுமேய” எனறனா. முதற்பொருள் ஆதிய மூன்று என்பன முதல், கரு, உரிப் பொருளாகும். இவற்றைத் தொல்காப்பியம்.