பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 329 தெய்வம் உணுவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிய என்று கூறுகிறது. உரிப் பொருள் இன்ன என்பதை, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேரும் காலைத் திணைக்குரிப் பொருளே என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. அதாவது குறிஞ்சிக்குப் புணர்தலும், பாலைக்குப் பிரிதலும், முல்லைக்கு ஆற்றி இருத் த.இம், நெய்தலுக்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் உரிப்பொருள்கள் என்பதாம். குறிஞ்சி நிலம்: செந்தழல் ஒளியில் பொங்கும் தீபமா மரங்க ளாலும் மந்திகள் முழையில் வைத்த மணிவிளக் கொளிக ளாலும் ஐந்தும்ஆ றடக்கி யுள்ளார் அருப்பெருஞ் சோதியாலும் எந்தையார் திருக்கா ளத்தி மலையினில் இரவொன் றில்லை முல்லை நிலம்: நீல மா மஞ்சை ஏங்க நிரைக்கொடிப் புறவம் பாடக் கோலவெண் முகையேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட ஆலுமின் னிடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலநீ டரங்கில் ஆடக் காரெனும் பருவ நல்லாள் மருதம்: கருங்கதலிப் பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகம்காட்ட மருங்குவளர் கதிர்ச்செந்நெல் வயப்புரவி முகம்காட்டப்