பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 365 " சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வாளுேர்க்கும் ஈண்டு ' என்றனர். இதனேயே ஈண்டு, 'தளிமுன் பலவும் வண்பூசையொடு சிறப்பு மாரு தே பொலிய மழை வளனும்' எனப்பட்டது. 'சீரைத் தேடின் ஏரைத் தேடு' என்பது பழமொழியாதலின் , 'பெருமை வாய்ந்த மேழி என்றனர். மேழிச் செல்வம் கோழைபடாத காரணத்தாலும் மேரி பெருமை வாய்ந்தது. வேளாளர் சிறப்பைக் கம்பர் கூறும்போது, வேதியர்தம் உயர்குலமும் விறல்வுேந்தர் பெருங்குலமும் நீதிவளம் படைத்துடைய நிதிவணிகர் தம்குலமும் சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர் கோதில்குலம் தனக்குநிகர் உண்டாகில் கூறிரே என்றும், வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலஅனைத்தும் ஒதுவார் எல்லாரும் உழுவார்தம் தலக்கடைக்கே கோதைவேல் மன்னவர்தம் குடைவளமும் கொழுவளமே ஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே என்றும், சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும் பேர்வளரும் வணிகருக்குப் பெருநிதியம் மிகவளரும் ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த பார்வளரும் காராளர் பயிர்வளரும் திறத்தாலே என்றும் குறிப்பிட்டுள்ளவற்றை அறிந்தால் உலகைக் காப் பவர் வேளாளர் என்பதை மேலும் உறுதிப்படுத்தலாம். 'அது புகன்று” என்பது, 'பசிவருத்தம் நீங்கிளுேம் என்று தேவர்கள் சொல்வி என்பதால், யாகாதி செய்யும் காலங்களில் அவிஸ் உணவு, அவர்கள் கொள்ளுதலைக் குறிப்பதாகும். திருமால் காக்கும் தொழிலை மேற்கொள்ளுதற்கு இறை வனே திருவருள் புரிந்த காரணன் என்பதை,