பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 சப்பாணிப் பருவம் இவ்வேண்டுகோளை இறைவர் நிறைவ்ேற்றினர் என் பதைச் சேக்கிழார், நீடுதிருத் தூங்கான மாடத்து நிலவுகின்ற ஆடக மேருச் சிலையான் அருளாலோர் சிவபூதம் மாடொருவர் அறியாமே வாகீசர் திருத்தோளில் சேடுயர்மூ விலைச்சூலம் சின விடையின் உடன் சாத்த என்று உணர்த்தியுள்னனர். தண்டி அடிகள் கண் பார்வை அற்றவர். அவரிடம் சமணர்கள் போந்து பரவி, "உன் கண்பார்வை உறுமாறு நீ பணியும் பரமர் செய்ய இயலுமோ? இயன்ருல் நாங்கள் இவ்வூரில் இரோம்' என்று அறைகூவிய போது, தண்டி யடிகள் இதனே இறைவனிடம் முறையிட்டுப் பின் திருவாரூர் கமலாலயக் குளத்தில் மூழ்கி எழுத்தனர். அதுபோது அவர்க்குக் கண் பார்வை நன்கு தெரியவந்தது. இதனைச் சேக்கிழார், 'தொழுது புனல்மேல் எழும்தொண்டர் து ய ம ல ர் க் க ண் பெற்றெழுந்தார்' என்றருளினர். சுந்தரர் இதனை அழகுற, "நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” என்றருளிப் போத்தார். இவ்வாறு இறைவர் அடியவர் வேண்டியதை வேண்டியபடி ஈந்த இடங்கள் பல. இதனுல்தான் மணிமொழியார், , "வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ என்றனர். ாகீசரும் 'வேண்டுவார் வேண்டுவன ஈவான் கண்டாய்' என்றனர். வள்ளலாரும் 'வேண்டியநான் வேண்டியவாறு எனக்கருளும் தெய்வம்' என்றனர். - நம்பர் அருள் இன்றேல் ஈனசமயத் தொடக்கு இருந்தே திரும். இதனைத் திரு நாவுக்கரசர் நன்குனர்ந்தவர் என்ப தைச் சேக்கிழார் வாக்கு உணர்த்துகின்றது. நில்லாத உலகியல்பு கண்டுதிலே யாவாழ்க்கை அல்லேன் என் நறத்துறந்து சமயங்கள் ஆனவற்றின் நல்லாறு தெரிந்துணர நம்பர் அரு ளாமையிஞல் கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம் குறுகுவார் என்ற பாடலைக் காண்க.