பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 சப்பாணிப் பருவம் இக்கருத்தைத் திருவானேக்காப் புராணமும், இளங்குழவிப் பிணிக்கின்ற தாய்மருந்து நுகர்வபோல் இருளின் மாண்ட களம்குலவும் மலம் உயிர்கட் கொழிய அருள் நடம்காணும் கடன் மீக் கொண்டு வளம்குளவும் தனதுபெருங் கற்பும்ஒரு கணவர்இறை மாண்பும் தோன்ற விளங்கும்இர ணியமன்றில் நின்றருளும் மணிவிளக்கை விளம்பி வாழ்வாம் என்று விளக்கிக் காட்டுகிறது இறைவி இறைவனது ஊழிக் காலத்துத் திருநடம் போதும், அந் நடனத்தைக் காண்பவள் என்பதைச் சங்க நூலாகிய கலித்தொகையும், படுபறை பல இயம்பப் பல்உருவம் பெயர்த்துநீ கொடுகொட்டி ஆடுங்கால் கோ டுயர் அகல் அல்குல் கொடிபுரை துசுப்பினுள் கொண்டர்ே தரு வாளோ மண்டமர் பலகடந்து மதுகையான் நீறணிந்து பண்டரங்கம் ஆடுங்கால் பணஎழில் அனேமென்தோள் வண்டரற்றும் கூந்தலாள் வளர்துக்குத் தருவாளோ கொலை உழுவைத் தோல்அசைஇக் கொன்றைத்தார் சுவல்புரளத் தலைஅங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால் முலைஅணிந்த முறுவலாள் முன்பாணி தருவாளோ என ஆங்கு, பாணியும் தூக்கும் சீரும் என்றிவை மாணிழை அரிவை காப்ப - ஆணம்இல் பொருள்மைக் கமர்ந்தனே ஆடி என்று கூறுகிறது, ஆகவே, திரு பிள்ளை அவர்கள் 'உமை காண மணிப் பொது நடனம் செய்வார்' என்றனர். சேக்கிழார் பெருமானுர், தாம் திருத்தொண்டர் வர லாற்றினைப் பாடத் தில்லேயம்பதி போந்தார். போந்தவர்