பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8:30 சப்பாணிப் பருவம் ஈர மேனியை நீக்கி இடம்கொடுத் தார இன்னமு தாட்டுதற் காசையால் தார மாதரை நோக்கித் தபோதனர் தீர வேபசித் தார்செய்வ தென் என்று கூற, அதுபோது அவர்தம் மனைவியார் செல்லல் நீங்கப் பகல்வித் தியசெந்நெல் மல்லல் நீர்முளே வாரிக் கொடுவந்தால் வல்ல வாறமு தாக்கலும் ஆகும்.மற் றல்ல தொன்றறி யேன் என் றயர்வுற என்றதும், நாயனர் மற்றம் மாற்றம் மனைவியார் கூறலும் பெற்ற செல்வம் எனப்பெரி துள்மகிழ்ந் துற்ற காதலி ல்ைஒருப் பட்டனர் சுற்று நீள்வயல் செல்லத் தொடங்குவார் என்றும், அறிவித்திருப்பதைக் காண்க. இத்தகையவர் குலத்தில் நந்தம் சேக்கிழார் பெருமாளுர் பிறந்துள்ளார். அவர் தம் குலப் பெருைைமக்கேற்ப இலம் என்று உரையாது ஈந்து வந்த பெருமையர். இதனை நன்கு அறிந்த ஆசிரியர் ஈண்டு 'ஆதுலர் எண்ணம் ஒருங்கு தெரிந்து அனேயார் தண்டல் இலா மகிழ்பூப்ப மலர்க் கைத் தலம் விரியாது குவிதல்' என்று குறித்துப் பாடியுள்ளார். இவ்வாறு கொடுக்கும் இயல்பினரிடம் சென்று இரத்தலும் ஒர் அழகாகும் என்பதைத் திருவள்ளுவர், கரப்பிலார் நெஞ்சின் கடன் அறிவார் முன்நின்று இரப்பும்ஒர் ஏஎர் உடைத்து என்றனர். இங்ஙனம் இரக்கின்றவர்கட்குக் கொடுக்கும் பண்பு குல முடையவரிடத்தில்தான் உண்டு என்பதையும் திருவள்ளுவர், இலம்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலமுடையார் கண்ணே உள என்று அறிவுறுத்தினர்.