பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 407 திருஇந்திர நீலப் பருப்பதம் வடநாட்டுத் தலங்களில் ஒன்று. ஞானசம்பந்தரால் பாடப்பட்டது. இதற்கு ஒரே பதிகம் உளது. மேகம்தவழ்ந்த வண்ணமாகக் காட்சி அளித் தலின் இஃது இந்திர நீலப் பருப்பதம் என்ற பெயரினேப் பெற்றது. இந்திரளுல் பூ சி க் க ப் ப ட் டு ள் ளது. இதனைச் சம்பந்தர் இந்திரன் கைதொழு நீல் பருப்பதம் என்று குறிப்பிட்டுள்ளனர். இத்தலம் திருக்கேதாரம் போகும் வழியில் உள்ளது என்பர். இறைவர் நீலாசலநாதர் எனவும், இறைவியார் நீலாம்பிகை;எனவும் கூறப் பெறுவர். அர்ச்சுனன் தவம் செய்த இடம்; இறைவனிடம் பாசு பதாஸ்திரம் பெற்ற இடம். மூகாசூரன் மடிந்த இடமும் இதுவே. இரத்தினகிரி என்பது தேவாரத்தில் வாட் போக்கி என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆலநீழல் அமர்ந்த வாட் போக்கியார் அரக்கனுக்கருள் செய்த வாட் போக்கியார்' என்ற திருநாவுக்கரசர் திருவாக்கைக் காண்க. மாணிக் கத்தை விரும்பி வடநாட்டு மன்னன் இங்கு வந்தனன். அவனுக்கு இறைவர் ஒரு நீர்த் தொட்டியைக் காட்டி, அதில் காவிரி நீரை நிரப்பும்படி கட்டளை இட்டனர். மன்னன் பெரிதும் முயன்றும், அவளுல் அவ்வாறு செய்ய இயலாமல் போயிற்று. அதனுல் சினம் கொண்ட மன்னன் இறைவன் மீது தன் வாளை வீசினன். இத்தழும்பு சிவலிங்கத்தில் இன்றும் இருப்பதைக் காணலாம். இறைவன் அவ்வாளேப் போக்கி இரத்தினம் அளித்தனன். இக் காரணங்களால் வாட் போக்கி எனவும், இரத்தினகிரி எனவும் பெயர் பெற்று இம்மலை திகழ்கிறது. அரசன் உலகை வெறுத்து அங்கேயே தொண்டு செய்து முத்தி பெற்றனன். இங்கு இந்திரன் சயந்தன், சூரியன், வாயு, சேடன், அகத்தியர் ஆதியோர் பூசித்துப் பேறு பெற்றனர். கோவில் மலை மீது உளது. இறைவர் ரத்னகிரிநாதர் எனவும், தேவியார் சுரும்பார் குழவி அம்மை என்றும், பெயர் பெற்றுள்ளனனர். காவிரியே இதற்குத் தீர்த்தம். அப்பர் பெருமானுர் பாடிய