பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 முத்தப் பருவம் தாலும், "வாங்கு சிலைபுரையும் உடல் எனும் குளத்தில் மூல மலமெனும் ஓர் வெங்கராவின் பகுவாயின் நின்றும் தீங்கில் உயிர் எனும் பணவக் குல மகனே ஆதி திரோதாயி என்னும் ஒரு வெந்திறல் கூற்றுவல்ை ஒங்குறுநாதாந்தமெனப் பெயரிய அக்கரையில் உமிழ்வித்துச் சிவமெனும் ஒர் தந்தை யொடும் கூட்டும் கவிகளைப் பாடி உயிர்களை உய்வித் திருப்பதாலும் நம் தம் பெருமாளுர் சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர்களின் தோற்றமாக நம் கண்முன் பொலிதலி லுைம், தீந்தமிழால் பெரிய புராணம் பாடி அருளியதாலும் திருபிள்ளை அவர்கள் எங்கள் கண்ணில் பொலி செந்தமிழ் மணக்கும் கனிவாய்” என்று சேக்கிழார்க்கும் பொருந்தப் பாடினர் எனினும் பொருத்தமே. தமிழ் இலக்கிய நோக்கம் கொண்டு பார்க்கும்போது சிந்தாமணி சீரிய காவியமே என்ருலும், அதில் சைவ சமயச் சார்புடைய சோழகுல மன்னர் ஈடுபட்டிருந்ததை இவர் மெல்ல நீக்கிச் சைவ சமயச் சார்பில் ஈடுபடும்படி செய்தனர். இப்படிச் செய்தது சேக்கிழார்க்குக் குற்றம் ஆகும் என்று ஒரு சிலர் இவர்மீது குற்றம் கூறத் துணிபவ்ரும் உளர். அவர்கள், சேக்கிழார் ஒரு புலவர் மட்டும் அல்லர், அமைச்சரும் ஆவர் என்பதை மறந்தவர் ஆவார். அமைச்சர் இயல்புகள் இத் தகைய என்பதை வள்ளுவர் வகுத்துக் கூறும்போது, தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு என்றும், அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன் என்றும் கூறியிருப்பதுகொண்டு மன்னனுக்கு அறிவுறுத்தி ஆட்கொண்டது குற்றமாகாது. ஆகவேதான், ஈண்டு ஆசிரியர் சேக்கிழாரை 'அநக' என்றனர். சம்பந்தர் எலும்பைப் பெண்ணுக்கிய திறனையும், சுந்தரர் வெள்ளே யானைமீது கயிலை சென்ற காட்சியினையும் குறித்துக் கற்பனேக் களஞ்சியம்ாம் சிவப்பிரகாசர் பாடி