பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 முத்தப் பருவம் ஒதுக்கவேண்டிய குற்றங்கள். விதி-ஏற்கவேண்டிய இலக்கண விதிகளை, உலகு-உலக மக்கள், ஏத்த-போற்ற, அல்-இரவு, பணி-தொண்டு, உய்ந்த-பிழைத்த, அருள் தற்கு +ஆய. விளக்கம்: இச்செய்யுள் பெரியபுராணம் மூல இலக்கியம், ஆதி காவியம் என்பதை நன்கு எடுத்து இயம்புகிறது. சேக்கி ழார் தம் செய்யுட்களில் சொல் அழகும் பொருள் அழகும் சிறந்த முறையில் அமைந்துள்ளன. கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச் சுரும்பல்லி குடைநீலத் துகள்அல்ல பகல்எல்லாம் அரும்பல்ல முலை என்ன அமுதல்ல மொழிஎன்ன வரும்பல்லா யிரங்கடைசி மடந்தையர்கள் வய (லெல்லாம் என்றும், பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல் ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை சீர்ப்பரவை ஆயினுள் திருவுருவின் மென்சாயல் ஏர்பரவை இடைப்பட்ட என்ஆசை எழுபரவை என்றும் சொல்லின் அழகைப் புலப்படுத்திய ஆற்றைக் காண்க. சுந்தரர் திருவாரூரில் பரவையாரை மணந்திருந்தும் திருவொற்றியூரை அடைந்தபோது, சங்கிலியாரையும் மணக்க விரும்பி, ஒற்றித் தியாகனை வேண்டுமிடத்துச் சேக் கிழார் பெருமானுர் சுந்தரர் திருவாக்காக, மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின்கண் கங்கை தன்னைக் கரந்தருளும் காதல் உடையீர் அடியேனுக்கு இங்கு நுமக்குத் திருமாலே தொடுத்தென் உள்ளத் தொடைஅவிழ்த்த திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தம் தீரும்என