பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 முத்தப் பருவம் கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும் அம்மாண் பினவே அமைச்சு என்று நீதிநெறி விளக்கமும் கூறியுள்ளது. காலத்தையும் கருமத்தையும் உணர்த்த வேண்டிய வனும் அமைச்சனே. இதனைத்தான் வள்ளுவர்,

  • கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு ’’ என்றனர். இப்பண்புகள் அமைச்சனுக்குத் தேவை என்பதை விநாயக புராணம், நனிபயன் பயப்பச் சிறுமுயற் சியினுல் நலத்தகு வினையும்மற் றனைய வினையினைத் தொடங்குங் கால்அது தனக்கு வேண்டிய பொருள்களும் படையும் இனிதுறப் பொழுதும் உபாயமும் செயலும் இடைப்படும் ஊறுகள் நீக்கித் துணிவுற முடிவு போக்கிடு மாறும் சூழ்தர வல்லவன் அமைச்சன் என்கிறது. காலம் அறிந்து செயல்களைச் செய்தல் வேண்டுமெனக் கூற வேண்டியவனும் அமைச்சளுவான். வெற்றி காணற்குக் காலம் இன்றியமையாதது. இதனுல்தான் வள்ளுவர், to £ பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு ’’ ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின் என்று கூறியுள்ளனர்.