பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 முத்தப் பருவம் அண்ட வாணர்தொழு தில்லை அம்பலவர் அடிஎடுத் துலகெ லாம்எனத் த்ொண்டர் சீர்பரவு சேக்கி ழான் வரிசை துன்று குன்றைநகர் ஆதியன் தண்ட காதிபதி திருநெ றித்தலைமை தங்கு செங்கைமுகில் பைங்கழல் புண்ட ரீகமலர் தெண்ட னிட்டுவினை போக்கு வார்பிறவி நீக்குவார் என்று போற்றினர். இங்ங்ணம் சேக்கிழார் பெருமானுர் திருவடிகளை வணங்கு பவர்கள் பிறவிப் பிணி நீங்குவர் என்றபோது, சேக்கிழார் அதனின்று நீங்கியவர் என்பது தேற்றம். எனவே, அவர் 'போக்கு வரவில் பூரணமே” எனப்பட்டார். அதனை விளக்க மேலும் பிள்ளையவர்கள், "இனிமேல் ஒரு தாயர் கலஞ்சார் முலைப்பால் அருந்தாத கனிவாய்' என்றும் போற்றினர். பிறவி எடுத்தால் அன்ருே தாயர் முலைப் பாலினே அருந்த இயலும்? பிறவி தோறும் தாய்மார்தரும் பால் திருப்பாற் கடலும் சிறிதாகும் அளவுக்கு இருக்கிறது என்பதைச் சோன சல தேவர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் ஒடுக்கத்தில் நிஷ்டை கூடி இருந்தபோது, எடுத்தசன னங்கள்தொறும் ஈன்றெடுத்த தாயார் கொடுத்த முலைப்பால் அனைத்தும்கூட்டில் அடுத்துவளர் பன்ன கணைத்துயிலும் பாலாழி யும்,சிறிதாம் மன்ன சிதம்பரதே வா என்று தோத்தரித்ததன் மூலம் அறியலாம். சேக்கிழார் யாவர் உள்ளத்தும் இனிக்கும் சுவை அமு தாகத் திகழ்ந்தனர் என்பதை உமாபதி சிவனர் பலபடப் புனைந்து பாடியுள்ளமையினால் தெரியலாம். இதனை,