பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 முத்தப் பருவம் குண்டங்கள், குழிகள், அழல்-ஒமாக்கினி, நுவல்-சிறப்பித்துக் கூறப்படும், புலவர்-தேவர், உதரகுண்டம்-வயிருகிய குழி, சரு-அவிர்ப்பாகம் (தேவர் உணவு), அரிசி, கோதுமை, நெய், பாலுடன் சமைத்த உணவு, நோன்மை-பெருமை, வலிமை, சால்-மிகுந்த, சால்-நீர்ச்சால், உததி-கடல், தாவாது-குறை யாது, வரைகள்-மலைகள், தையலார்-பெண்கள், குரிசிலார்சிறந்த ஆண்கள், சம்பராரி-சம்பராசுரனைக் கொன்ற மன் மதன், சரம்-மலராகிய அம்புகள், காலாறு-ஆறு கால்களை யுடைய வண்டுகள், மது-தேன், பட்டம்-குளம், கற்பம்கற்பக மரம், மேதி-எருமைகள், கால் ஆறு-பலவாய்க்கால் களாக, பரவு-போற்றும், சீர்-புகழ், விரவு-கலந்த. விளக்கம்: இப்பாடல் தொண்டை நாட்டின் வளனை அழகுபட அறிவித்து நிற்கிறது. ஈண்டு வேதியர்கள் தம் கடனுகிய யாகாதி காரியங்களைச் செம்மையுடன் செய்து வந்ததனல், யாக குண்டங்களில் யாகாக்கினி எழுந்த வண்ணம் இருந்தது. இதனைத் திருநீல நக்கர் புராணத்துள், 'ஆங்கு வ்ேதியில் ஆருத செந்தீவலம் சுழிவுற்ருேங்கி முன்னேயில் ஒருபடித் தன்றியே ஒளிர' என்று நம் சேக்கிழார் கூறும் ஆற்ருலும் உணரலாம். இங்ங்னம்யாகாதி காரி யங்கள் இடைவிடாது செய்யப் பெற்ருல் நாட்டில் வறுமை நிலவாது. இதனைச் சம்பந்தப் பெருமாளுர், 'கற்ருங்கு எரி யோம்பிக் கலியை வாராமே செற்ருர் வாழ்தில்லை' என்று அறிவித்திருப்பதைக் காண்க. திருஞான சம்பந்தர் திருமுகப் பாசுரத்தில் வாழ்க அந்தணர் என்று பாடியதற்கு விளக்கம் காட்டவந்த சேக்கிழார், அந்தணர் தேவர்ஆன் இனங்கள் வாழ்கஎன்று இந்தமெய்ம் மொழிப்பயன் உலகம் இன்புறச் சந்தவேள் விகள்முதல் சங்க ரர்க்குமுன் வந்த அர்ச் சனவழி பாடு மன்னவாம் என்று அருளிப் போந்தார். இங்ங்ணம் வேள்விபுரிபவர் வேதங்களையும் ஆறு அங்கங் களையும் தேர்ந்தவராக இருத்தல் வேண்டும். இது குறித்தே