பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 முத்தப் பருவம் ஆகவே, இவர் ஆரியர் அல்லரோ? இவரிடம் கற்ற மாணவர்களுள் ஒருவன் சித்தன் என்பவன். அவன் தன் ஆசிரியரது மனையாளை விரும்பிப் பலகால் அம்மாது தனித்து இருக்கும் சமயங்களில் சென்று சொல்லால் தொந்தரவு செய்து வந்தனன். ஒரு நாள் அவன் செய லாலும் தொந்தரவு செய்யலானன். அதனைப் பரஞ் சோதியார், பின்னுெரு பகல்போய்ச் செங்கை பிடித்தனன் வலிப்பத் தள்ளி வன்னிலைக் கதவம் நூக்கித் தாழக்கோல் வலித்து மாண்ட தன்னிலைக் காப்புச் செய்தாள் தனிமனக் காவல் பூண்டாள் அந்நிலை பிழைத்த தீயோன் அனங்கத்தி வெதுப்பப் போனுன் என்றனர். இவன் ஆரியர் குழாத்தில் உள்ள பூரியன் அல்லனே? ஆகவே, ஆரிய குழாத்தினுள் பூசியர் விராயது என” என்றனர். வாளை பாய்தலையும் தெங்கம்பழம் விழுதலையும் ஈண்டுப் பிள்ளை அவர்கள் குறிப்பிடுவதைக் காணும்போது திருத்தக்க தேவரது வாக்காகிய, காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங்கனி சிதறிவாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங்கதம் என்றிசையால் திசைபோய துண்டே என்பதை நினைவு கூராமல் இருக்க இயலாது. இதே நேரத்தில் திருமங்கை ஆழ்வார், பாளை வான்கமு கூடுயர் தெங்கின் வண் பழம்விழ வெருவிப்போய் வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வரைபுரு டோத்தமமே