பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 478 இந் நெற்போர் திடராக நின்றது. தொண்டை நாடு செல்வம் மிக்கது என்பதும், கரும்புச் சோலைகளை மிகுதி யாகக் கொண்டது என்பதும் ஈண்டுக் கூறப்பட்ட கருத்துக்க ளாகும். கடல் நீர் உப்பானது. ஆனால், கருப்பஞ் சாருகிய ஆறு கடலோடு கலந்ததல்ை அவ்வுப்புநீர் இனிப்பு நீராக மாறியது. இதனை அறியாத மக்கள் கடலில் நீராடுகையில் அந்நீர் இனித்தலை அறிந்து, இஃது இனிமை கலந் திருத்தலின் இனிப்பாக மாறியது என்றும் கருதினர் என்க. தமிழ் எனும் சொல்லுக்கு இனிமை என்னும் பொருள் இருத்தலின், அப் பொருள் இங்குப் பெய்யப் பட்டுள்ளது. இப் பொருட்டாதலை தமிழ் மாருதம் எனச் சேக்கிழாரும் வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே என்று கம்பரும் கூறுதல் காண்க. ஆகவே "ஈண்டும் தமிழ் வாய்ச் செறிந்தும்' எனப்பட்டது. - ஆறு எங்குப் பரந்து போயினும், அடையவேண்டிய இடம் கடலே ஆதலின், 'அலைஆழியில் கலந்து' என்றனர். கம்பரும், 'கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்' என்றனர். உவரிநீர் உப்புச் சுவை உடையது. அதனை மாற்றும் ஆற்றல் கருப்பஞ் சாருக்கு உண்டு ஆதலின், 'உவரும் மாற்றி” என்றனர். குமரகுருபரரும் இதுபோன்ற கலப் பால் உவரி உவர்ப்பு நீங்கும் என்பதைக் 'கலுழி வெள்ளம் உவரோடு உவரிக்கடல் புலவு மாற்றும் கடவுள் கந்தபுரி" என்றனர். கடல்நீர் கரும்பஞ்சாற்றின் கலப்பால் இனிமையாய் இருந்தமையில், 'இனிமையாய்த் திகழ்கின்றதென்று எண்ணி ஆடுநர்கள் உண்டு மகிழ்" என்றனர். கம்பர் மீன்கள் உண்டு மகிழ்ந்தன என்பதை, ஆலவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும் சோலேவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இருலின் தேனும்