பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 முத்தப் பருவம் என்பர். வாளே பாய்தலால் சந்திரமண்டலம் கிழி தலும், காமதேனு மடித்தலம் குழைதலும் முன்பு கண்டனம். ஈண்டு, மரக்கொம்பில் உள்ள தேனடை கீண்டது. தேனடை கீண்டப்பட்டால் தேன் பாயும் என்று கூறவா வேண்டும்? அத்தேன் வெள்ளமும் கரும்பாலைச் சாறும் கலந்த படியினை ஈண்டுக் கூறியுள்ளார். வெள்ளத்தின் மிகுதியினல் ஏழ் கடலும் நன்ருக இணந்து பாயத் தொடங்கினவோ என்று வியந்து கூறத் தொடங்கிவிட்டனர். இவ்வளவு வளமும் தொண்டை நாட்டில் இருத்தலின், 'அமையாப் பெருவளம்" எனப் பேசினர் புலவர் ஏழ் கடல்களுள் பாற் கடலும் தேன் கடலும் உள அல்லவோ? திரு பிள்ளை அவர்கள் முத்தப் பருவ்த்தில் பெரிதும் தொண்டை நாட்டின் நீர்வளம் நிலவளம் இவற்றைச் சிறப்பித்துள்ளனர். திரு பின்ளே அவர்கட்குத் தமது பாட்டுடைத் தலைவரைப் புகழும் வாய்ப்புப் பெற்ற நிலையில், அவரது நாட்டினையும் பெரிதும் சிறப்பித்துப் பேச வேண்டும் என்ற கருத்தினுல்தான் இவ்வளவு சிறப்பாகத் தொண்டை நாட்டின் வளத்தினை வர்ணிப்பாராயினர். இவ்வாறு பாடுதற்கு வழிகாட்டியவர் நமது சேக்கிழாரே ஆவார். சேக்கிழார் பெருமானர் தமது தொண்டை நாட்டின் சிறப்பினைப் பாடத் திருக் குறிப்புத் தொண்டர் நாயனர் புராணத்தைக் கருவியாகக் கொண்டனர். அப் புராணத்தில் திருக்குறிப்புத் தொண்டர் தாயரைது வரலாறு பற்றிய பாடல்கள் பதினெட்டே ஆகும். ஆனல், தொண்டை நாட்டுச் சிறப்பைக் கூறும் பாடல்கள் நூற்றுப் பத்தாகும். திரு பிள்ளை அவர்கள் தொண்டைநாட்டின் நீர்வளத் தினைக் குறித்துப் பாடியுள்ள இடங்களில் பெரிதும் வாளே மீன்களின் செயல்களைப்பற்றியும், கருமேதியின் செயல்களைப் பற்றியும் ஆகும். இவ்வாறு பாடுதலின் வன்மை பெற்றவர் குமரகுருபரர் அவரது நூலே இவர் நன்கு சுவைத்துப் பயின் றிருந்ததல்ை என்று கூறின் அது மிகை ஆகாது.