பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாரானப் பருவம் 1. மண்டலம் மதிக்கும்மணி யாத்தஉச் சிப்பூவும் வண்பட்ட முஞ்சுட்டியும் வாகுவல யமும்மதா னியும்.உதய வெயில்செய மகத்துவத் தொண்டர்சீர்த்தி விண்டலம் மதிக்கஎழு செய்யவாய்ப் புகழெழுதல் விழையஎழு குறுமுறுவலும் வெண்ணிறு முத்தமா லிகையும்இள நிலவுசெய வெய்யேம் மனத்தடத்துத் தண்டல் அமை யாதலர் சரோருகப் பதமேல் சதங்கையும் தண்டையும்ஒளி தவாஞெகிழி யும்படி இக் கலகல இரட்டி உயர் சைவநிலை எங்கும்நிகழக் கொண்டல் அமர் கொடைகொண்ட் கரதலச் சேவையார் குலசிகா மணிவருகவே கொன்றைச் சட்டவியர் மன்றைப் பராவிஎழு குன்றைப் பிரான் வருகவே (அ. சென். மண்டலம்-உலகம், மணி-இரத்தினக் கற் களால், யாத்த - பதித்த, , உச்சிப்பூ - குழந்தைகட்கு அணியும் ஒருவகை அணிகலன், இஃது உச்சியில் அணியப் படுவது, வண்பட்டம்-வளமான நெற்றிப்பட்டம் என்னும் ஆபரணம், சுட்டி-நெற்றிச் சுட்டி என்னும் அணிகலம். வாகுவலயம் - தோள்வளை என்னும் நகை, மதாணிமார்பில் அணியும் ஒருவகை கலம், வெயில்-ஒளி, ஒர்த்தி-மிகுந்த புகழை, விண்தலம்-தேவலோகம், விழையஒப்ப, குறுமுறுவல்-சிறுநகை, மாலிகை-மாலை, வெய் யேம்-கொடுமை மிக்கவர்களாகிய எமது, தடம்-குளம்