பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானப் பருவம் 49? சமணருள் நிகண்டவாதிகள் என்பர். இவர்கள் நல்வினை, தீவினை கெடுதல், இன்பம் என்பவர்கள். இவர்கள் தன்மையை, சீர்சால் நல்வினை தீவினை அவைசெய்யும் வருவழி இரண்டையு மாற்றி முன்செய் அருவினைப் பயனது பவித்தறுத் திடுதல் அதுவீ டாகும் என்றனன். என்று மணிமேகலை கூறுகிறது. இக் கொள்கையினைப் பிரபாகரன் மதம் என்றும் கூறுவர். ஆணவ மலம் நசித்தலே இன்பம் என்பவர் பேதவாத சைவர். விக்கிரக நித்தம் இன்பம் என்பவர் சிவ சமவாத சைவர். இவர்கள் சிவசாரூப முதலான பதபத்திகளைப் பெறுதலே முத்தி இன்பம் என்பவர். ஞானமே இன்பம் என்பவர் மாயா வாதிகள். இவர்களது மதக் கொள்கையினைச் சிவஞான போத பரபக்கம். தானே தாளுய் அனுபோகம் தன்னில் தன்னை அனுபவித்திட் டுனே உயிரே உணர்வே என் ருென்றும் இன்றி உரைஇறந்து வானே முதலாம் பூதங்கள் மாய மாயா தேமன்னி நானே பிரமம் எனத்தெளியும் ஞானம் பிரம ஞானமே என்றும், 'சாற்றும் மறைதத் துவமசிமா வாக்கி யங்கள் தமைஉணர்ந்தால் போற்றி அது நீ ஆய்ைஎன் றறைவ தல்லால் பொருள் இன்றே' என்றும் கூறுகிறது, 32